Drumstick Leaves Sambar : உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் முருங்கைக்கீரை சாம்பார்!
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – 200 கிராம்
பூண்டு – 4 பல்
பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 150 கிராம்
முருங்கைக்கீரை – 2 கைப்பிடி அளவு
சாம்பார் தூள் – இரண்டு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஐந்து
தக்காளி – 4
புளி – நெல்லிக்காய் அளவு
தேங்காய் எண்ணெய் – இரண்டு ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
தாளிப்பதற்கு
கடுகு – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
வெந்தயம் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
குக்கரில் கழுவிய பருப்பு, பூண்டு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும்.
முருங்கைக்கீரையை கழுவி வைத்துக் கொள்ளவேண்டும்.
கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்து சின்ன வெங்காயம், கிள்ளிய காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி அதனுடன் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கி சாம்பார் தூள் போட்டு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
பின்னர் அதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
அதில் வேகவைத்த பருப்பு, கரைத்த புளித்தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும்.
நன்கு கொதித்தவுடன் இறக்கி வைக்கவேண்டும்.
பின் ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முருங்கைக் கீரையை போட்டு நன்றாக வதக்கி அதை சாம்பாருடன் சேர்த்து நன்றாக கலந்துவிட்டால் சூப்பரான மிகவும் சத்தான முருங்கைக்கீரை சாம்பார் ரெடி.
இதை சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு சாப்பிட சுவை அள்ளும்.
முருங்கைக்கீரையில் உடலுக்கு ஊட்டமளிக்கும் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை ரத்தசோகையைப்போக்கி, ரத்தத்தில் ஹீமோகுளேபின் அளவை அதிகரித்து, உடலுக்குத் தேவையான எதிர்ப்பாற்றலை வழங்குகிறது. முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மையளிக்கிறது. எனவே அடிக்கடி முருங்கைக்கீரையை சேர்த்து உடலுக்கு வலு சேர்த்திடுங்கள்.