கிட்டத்தட்ட ரூ.1 கோடி.. இந்த Range Rover Velar காரில் என்னதான் இருக்கு?
ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) நிறுவனமானது தனது Range Rover Velar காரின் விலையை ரூ.6.40 லட்சம் வரை குறைத்துள்ளது.இந்த விலை குறைப்பை தொடர்ந்து இப்போது இந்த காஸ்டலி எஸ்யூவி-யின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.87.9 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2024 Range Rover Velar அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் அதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.93 லட்சமாக இருந்தது, இது பிறகு ரூ.94.3 லட்சமாக அதிகரித்தது. இந்த நிலையில் தான் தற்போது இதன் விலை ரூ.6.40 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. 2024 Velar மாடலானது பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் கூடிய சிங்கிள் டாப்-ஸ்பெக் HSE ட்ரிமில் கிடைக்கிறது.
டிசைன்..
முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது, 2024 Velar அதன் முன்பக்கத்தில் பிக்சல் எல்இடி செட்டப் மற்றும் பின்புறத்தில் புதிய டெயில்-லைட் கொண்ட புதிய லைட்டிங் சிக்னேச்சரை பெறுகிறது. புதிய ஃப்ரன்ட் மற்றும் ரியர் பம்ப்பர்ஸ், புதிய அலாய் வீல்ஸ், டே டைம் ரன்னிங் லைட்ஸ் உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக முந்தைய மாடலை விட இது நேர்தியானதாக காணப்படுகிறது. ஃப்யுஜி ஒயிட் மற்றும் சான்டோரினி பிளாக் கலர் ஆப்ஷன்களுடன் மெட்டாலிக் வரசின் ப்ளூ மற்றும் பிரீமியம் மெட்டாலிக் ஜாடர் கிரே உள்ளிட்ட 2 புதிதாய் கலர்களும் வழங்கப்படுகின்றன.
இன்டீரியர் & அம்சங்கள்..
2024 Range Rover Velar-ஐ பொறுத்த வரை இன்டீரியரில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நிறுவனம் கிளைமேட் கன்ட்ரோல்ஸ்களுக்கான பிஸிக்கல் டச் பட்டன்ஸ்களை நீக்கியுள்ளதோடு, அனைத்து கன்ட்ரோல்ஸ்களையும் புதிய, 11.4-இன்ச் கர்வ்ட் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிறீனிற்கு மாற்றியுள்ளது.
இந்த சொகுசு SUV-யானது அன்டர்-பானெட் வியூவுடன் கூடிய 360 டிகிரி கேமரா, 20-வே மசாஜ் ஃப்ரன்ட் சீட்ஸ் , பின்புற இருக்கைகளுக்கு power recline, ஏர் ப்யூரிஃபையர் , வயர்லெஸ் சார்ஜிங், மல்டிகலர் அம்பியன்ட் லைட்டிங், 12-ஸ்பீக்கர் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், பவர்ட் டெயில்கேட், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் பேட் மற்றும் 4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், அட்வான்ஸ் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS), மெட்டல் பெடல்ஸ், எலக்ட்ரிக் ஏர் சஸ்பென்ஷன், டிரைவர் சீட் மெமரி செட்டிங், ஆன்போர்ட் அமேசான் அலெக்ஸா அசிஸ்டென்ட், டெரெய்ன் ரெஸ்பான்ஸ் 2 சிஸ்டம் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் உள்ளது.
ரேஞ்ச் ரோவர் வேலார் பவர்டிரெய்ன்..
ரேஞ்ச் ரோவரின் Velar மாடலின் எஞ்சின் ஆப்ஷன்களில் இரண்டு 2-லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் அடங்கும். இதன் பெட்ரோல் எஞ்சின் 250PS பவர் மற்றும் 365Nm பீக் டார்க்கையும், டீசல் எஞ்சின் 204PS பவர் மற்றும் 420Nm பீக்டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் 2 என்ஜின்களுக்கும், 4 வீல்ஸ்களுக்கும் பவரை அனுப்புகிறது.
இந்த காரின் பெட்ரோல் எஞ்சினின் உச்சபட்ச வேகம் 217 கிமீ மற்றும் வெறும் 7.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும் என்று நிறுவனம் கூறுகிறது. அதே நேரம் இதன் டீசல் எஞ்சினின் அதிகபட்ச வேகம் 210 கிமீ மற்றும் வெறும் 9 வினாடிகளில் 0 -100 கிமீ வேகத்தை எட்டும் என்று கூறப்பட்டுள்ளது.