கவாசாகியின் நிஞ்ஜா 500 பைக் இந்தியாவில் அறிமுகம்..விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன..?

நிஞ்ஜா 500 இந்தியாவிற்கு விரைவில் வரும் என கவாஸாகி நிறுவனம் டீஸர் வெளியிட்ட சில நாட்களிலேயே, ரூ.5.24 லட்சம் என்ற அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த பைக் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் தனது மிடில்வெயிட் ஸ்போர்ட் பைக் செக்மென்ட் போர்ட்ஃபோலியோவை விரிவுப்படுத்தி இருக்கிறது.

நிறுவனம் தனது நிஞ்ஜா 500-ஐ முழுமையான பில்ட் அப் (CBU) இம்போர்ட்டாக அறிமுகப்படுத்தியுள்ளது. கவாஸாகி நிஞ்ஜா 500 பைக்கின் முக்கிய அம்சங்கள் மற்றும் ஸ்பெசிபிகேஷன்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

எடை :

நிஞ்ஜா 500 பைக்கின் எடை 171 கிலோ ஆகும். இது நிஞ்ஜா 400 பைக்கை (168 கிலோ) விட 3 கிலோ அதிகம். ஆனால் அதே சமயம் இது 175 கிலோ எடையுள்ள அப்ரிலியா ஆர்எஸ் 457 மற்றும் 172 கிலோ எடையுள்ள கேடிஎம் ஆர்சி 390 உள்ளிட்ட பைக்குகள் எடையை விட சற்று குறைவானது.

நிஞ்ஜா 500 பைக்கின் எஞ்சின் :

புதிய நிஞ்ஜா 500 பைக்கானது 9000rpm-ல் 45bhp பவரையும், 6000rpm-ல் 42.6Nm பீக் டார்க்கையும் வெளிப்படுத்தும் புதிய 451சிசி, பேரலல்-ட்வின் எஞ்சினை கொண்டுள்ளது. இந்த எஞ்சின் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப் & அசிஸ்ட் செயல்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறந்த செயல்திறனை Ninja 500 வழங்கும் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது.

நிஞ்ஜா 500 பைக்கின் டிசைன் :

நிஞ்ஜா 500 பைக்கின் டிசைனானது ஷார்ப்பான ஸ்டைலிங்குடன் நிஞ்ஜா 400-ன் பைக்கின் தோற்றத்தை பரிணாம வளர்ச்சி செய்ததை போல இருக்கிறது. கவாஸாகி நிஞ்ஜா 500 ஒரு ட்ரெல்லிஸ் ஃபிரேமை அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஜப்பானிய பிராண்டான கவாஸாகியின் புதிய ஸ்போர்ட்-டூரர் ஆகும். இது ஃபுல் ஃபேரிங், கிளிப்-ஆன் பார்ஸ் மற்றும் பிற நிஞ்ஜா தயாரிப்புகளை போலவே ஸ்பிலிட் ஹெட்லைட் டிசைனிங்கை கொண்டுள்ளது. தற்போது இந்த பைக் மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் கலர் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.

நிஞ்ஜா 500 பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் அம்சங்கள் :

இந்தியாவில் நிஞ்ஜா 500-ன் SE வெர்ஷன் அறிமுகப்படுத்தப்படவில்லை. இதில் கலர் TFT டேஷ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கே அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பைக்கின் ஸ்டாண்டர்ட் ட்ரிமில் ஃபோன் கனெக்டிவிட்டியுடன் கூடிய LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது. நிஞ்ஜா 500 பைக்கானது ப்ளூடூத் கனெக்டிவிட்டியை ஸ்டாண்டர்டாக வழங்குகிறது. மேலும் இதில் கொடுக்கப்பட்டிருக்கும் LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மூலம் பல தகவல்களுக்கான அணுகலையும் வழங்குகிறது.

சஸ்பென்ஷன் விவரங்கள் :

நிஞ்ஜா 500 பைக்கின் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் உள்ளது. பிரேக்கிங்கை பொறுத்த வரை பைக்கின் முன்பக்கத்தில் 310மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 220மிமீ டிஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இது 17-இன்ச் வீல்களை பெற்றுள்ளது. இந்த பைக்கின் ஃப்ரன்ட் டிஸ்க் பிரேக் நிஞ்ஜா 400 பைக்கில் கொடுக்கப்பட்டிருப்பதை விட விட்டத்தில் (diameter) பெரியதாக இருக்கிறது. இந்த பைக்கின் சீட் ஹைட் 785 மிமீ ஆகும். நிஞ்ஜா 500 பைக்கிற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டு மார்ச் மாதத்தில் டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *