#JUST IN : மயிலாடுதுறையில் ரூ.5 கோடி மதிப்பில் புதிய நூலகம் அமைக்கப்படும்..!

மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

மேலும் அவர் பல திட்டங்களை அறிவித்தார்

மயிலாடுதுறையில் ரூ.5 கோடி மதிப்பில் புதிய நூலகம் அமைக்கப்படும்

மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீன்இறங்குதளம் ரூ.30 கோடி செலவில் மேம்படுத்தப்படும்

திருவாரூரில் ரூ.2.5 கோடியில் உலர்மின் நிலையம் அமைக்கப்படும்

முத்துப்பேட்டையில் ரூ.10 கோடி மதிப்பில் மீன்இறங்குதளம் அமைக்கப்படும்

ரூ.44 கோடி மதிப்பில் கடைமடை நீர் ஒழுங்கிகள் அமைக்கப்படும்

மேலும், பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நிகழ்வில் பேசும்போது புதிய திட்டம் ஒன்றை அறிவித்தார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “நீங்கள் நலமா?” என்ற புதிய திட்டத்தை வரும் 6 ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறேன் என அறிவித்தார்.

மேலும் பேசிய அவர், ஒவ்வொரு நாளும் மக்களுக்கான திட்டங்களை பார்த்து பார்த்து செய்து வருகிறோம். மக்கள் தொண்டு ஒன்றுதான் நம் ஆட்சியின் நோக்கம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தாலும், ‘இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஒரு டெல்டா காரன்’ என்ற உணர்வோடு இந்த திட்டப்பணிகளை தொடங்கி வைத்துள்ளேன் என்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *