ஆனந்த் அம்பானி மாமனார் – மாமியார் உண்மையிலேயே பெரிய கைதான்..!

அம்பானி வீட்டுக்கு சம்மந்தி ஆவது சாதாரண விஷயம் இல்லை. ஒருபக்கம் அளவுக்கு அதிகமான பண வலிமை, மாபெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியம், அரசியல் முதல் சினிமா வரையில் மிகப்பெரிய செல்வாக்கு, விரல் சொடுக்கினால் காரியத்தை முடிக்கும் வலிமையான டீம் என பல விஷயங்கள் உள்ளது.
இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் 3வது சம்மந்தியாகியுள்ள வீரேன் மெர்ச்சன்ட் யார் என்பது பலரின் கேள்வியாக உள்ளது. இதேபோல் முகேஷ் அம்பானி எப்படி முகேஷ் அம்பானியை எதிர்கொண்டார்..? ஆனந்த் அம்பானி – ராதிகா-வுக்கான காதல் எப்படி உருவானது..?
ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் இருவரின் குடும்பமும் நீண்ட காலமாக நண்பர்கள் ஆவார்கள். இதனால் சிறுவயதிலிருந்தே இருவரும் நண்பர்களாக இருந்ததாகக் கூறப்படுகிறது இதேபோல் குழந்தைகளாக இருக்கும் போதே அவ்வப்போது இருவரும் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் மிகவும் தாமதமாகவே காதலில் விழுந்துள்ளனர், இதேவேளையில் ஆனந்த் அம்பானி பல உடல்நல கோளாறு காரணமாகப் பாதிக்கப்பட்டு இருந்தார். அப்போது ராதிகா, ஆனந்துக்கு பக்கபலமாக இருந்துள்ளார்.
இதில் தான் இருவருக்குமான நெருக்கும் அதிகரித்திருக்கும் என தெரிகிறது, நீதா அம்பானியை போல் ராதிகாவும் பரதநாட்டியம் ஆடக்கூடியவர் என்பதால் அவருடன் விரைவில் நெருக்கமானார். இவர்கள் இருவரும் காதலிப்பதாக முதலில் கடந்த 2020ஆம் ஆண்டு தான் தகவல் பரவியது.
சரி ஆனந்த் அம்பானியின் வருங்கால மாமனார், மாமியார் யார்..?
என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் துணைத் தலைவராக இருக்கும் வீரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் தான் ராதிகா மெர்ச்சன்ட். இந்த என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலும் ராதிகா மெர்ச்சன்ட் உள்ளார்.
வீரேன் மற்றும் ஷய்லா மெர்ச்சன்ட் இணைந்து என்கோர் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். என்கோர் ஹெல்த்கேர் பார்மாசூட்டிகல் நிறுவனத்தை அனந்த் அம்பானியின் மாமியார் நிர்வாக இயக்குநராக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
வீரேன் மெர்ச்சன்ட் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் சிஇஓ-வாக மட்டும் அல்லாமல் என்கோர் நேச்சுரல் பாலிமர்ஸ், என்கோர் பிசினஸ் சென்டர், என்கோர் பாலிஃப்ராக் தயாரிப்புகள், ZYG பார்மா மற்றும் சைதர்ஷன் வணிக மையங்கள் ஆகிய நிறுவனங்களின் டைரக்டர் ஆகவும் உள்ளார்.
90களில் ஷய்லா வீரேன் மெர்ச்சன்ட்டை திருமணம் செய்தார். அவர்களது திருமணத்துக்குப் பின் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஷய்லா பொறுப்பேற்றார். அவரது நிறுவனத்தின் நிகர மதிப்பு கிட்டத்தட்ட ரூ.2000 கோடி ஆகும்.
ஷய்லாவுடன் ராதிகாவும் அவரது சகோதரி அஞ்சலியும் போர்டு டைரக்டர்களாக உள்ளனர். டாப் தொழிலதிபராக மட்டுமல்லாமல் ஷய்லா மெர்ச்சன்ட் அவரது சிறப்பான ஸ்டைல் மற்றும் பேஷன் தேர்வுகளுக்காக பிரபலமாக உள்ளார்.
ஷய்லா, ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் தலா ரூ.10 கோடி சொத்து வைத்துள்ளனர். வீரேன் மெர்ச்சன்ட்-ன் மொத்த சொத்து மதிப்பு 755 கோடி ரூபாய், முகேஷ் அம்பானி-யின் 89.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு என்றாலும், அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் இருவரும் நீண்ட கால நட்பில் இருந்த நிலையில் இவருவரின் மன ஒத்துப்போய்த் தற்போது திருமணத்திற்கு வந்துள்ளது.
ராதிகா மெர்ச்சன்ட் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத் தலைவரும் மாமனாருமான முகேஷ் அம்பானியுடன் சேர்ந்து பல கோயில்களுக்குச் சென்று வழிபாடுகளை நடத்துவார். ஆர்ஐஎல் டைரக்டர் மனோஜ் மோடியுடன் சேர்ந்து ஸ்ரீநாத்ஜி கோயிலுக்கு 2022 ஆம் ஆண்டில் சென்று வழிபட்டார்.