தோனி இதை மட்டும் செய்தால் அவ்ளோதான்.. ஒரே அறிவிப்பால் வெறி பிடித்து அலையும் சிஎஸ்கே ரசிகர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி வெளியிட்ட ஒரே ஒரு அறிவிப்பால் அந்த அணியின் ரசிகர்கள் பித்துப் பிடித்து அலைந்து கொண்டு இருக்கின்றனர். தோனி தனது சமூக வலைதளங்களில் “புதிய தொடர், புதிய பொறுப்பு” என்ற வாசகத்தை பதிவிட்டு இருக்கிறார்.
பலரும் தோனி 2024 ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆலோசகராக மட்டும் செயல்பட இருக்கிறார் என்று கூறி வருகின்றனர். இது ஒரு விளம்பர உத்தியாக இருக்கலாம், தோனி நடிக்கும் ஏதேனும் தனியார் விளம்பரமாக இருக்கலாம் என சிஎஸ்கே அல்லாத பொதுவான குறிப்பிட்டு வருகின்றனர்.
ஆனால், வெறி பிடித்த சிஎஸ்கே ரசிகர்கள் தங்கள் இஷ்டத்துக்கு கற்பனையில் மிதந்து வருகின்றனர். சிலர் தோனி 2024 ஐபிஎல் தொடரில் துவக்க வீரராக களமிறங்க இருக்கிறார். சிஎஸ்கே அணியில் கடந்த இரண்டு சீசன்களில் துவக்க வீரராக ஆடிய நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே காயத்தால் இந்த சீசனில் பங்கேற்க முடியாத நிலையில் இருக்கிறார்.
எனவே, அவருக்கு பதிலாக தோனி துவக்க வீரராக இறங்கப் போகிறார். தனது கடைசி ஐபிஎல் தொடர் என்பதால் ரசிகர்களின் ஆசைக்காக துவக்க வீரராக இறங்கப் போகிறார் என அளந்து வருகிறார்கள் அந்த சிஎஸ்கே ரசிகர்கள். தோனி பேட்டிங் வரிசையில் மேலே ஆடுவதே சந்தேகம் தான். அவர் எப்படியும் ஆறாம் வரிசை அல்லது அதற்கும் கீழ் தான் பேட்டிங் செய்வார்.
அவருக்கு 2023 ஐபிஎல் தொடரின் போதே முட்டியில் காயம் இருந்தது. அந்த தொடர் முடிந்த உடன் தோனி அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தார். அதனால், 42 வயதான தோனி அதிக ரிஸ்க் எடுக்க மாட்டார் என சிஎஸ்கே வட்டாரம் கூறுகிறது. எனவே, தோனி சொல்லும் புதிய பொறுப்பு அணியின் ஆலோசகராக இருக்கலாம் அல்லது இது முற்றிலும் விளம்பரமாக இருக்கலாம். தோனி அத்தனை எளிதில் தன் சமூக ஊசகப் ஊடகப் பக்கங்களில் எந்த பதிவையும் வெளியிடுவதில்லை. எனவே, இது விளம்பரமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.