Gulf Ticket லொட்டரியில் தமிழ்நாட்டு இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் Gulf Ticket லொட்டரியில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் Gulf Ticket லொட்டரியில் அடுத்தடுத்து ஜாக்பாட் அடித்துள்ளது. அதில் ஒருவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்.’
இதன்மூலம் இரண்டு இந்தியர்களும் தலா ரூ.22.5 லட்சம் ரொக்கப் பரிசை வென்றனர்.
கடந்த இரண்டு வாரங்களில் Gulf Ticket இரண்டு வெற்றியாளர்களை அறிவித்துள்ளது.
அதில், பிப்ரவரி 29-ஆம் திகதி தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் சிவக்குமார் வெற்றிபெற்றுள்ளார்.
அவரை தொடர்ந்து மார்ச் 2-ஆம் திகதி புதுதில்லியைச் சேர்ந்த ஜக்தீப் மாத்தூர் வெற்றி பெற்றுள்ளார்.
இருவரும், Fortune 5 Draw-வில் 5-ல் 4 எண்களைப் பொருத்தி இந்திய பணமதிப்பில் 22.5 லட்சம் ரூபாய் வென்றனர்.