தனியார் துறை ஊழியர்களுக்கான வேலை நேரத்தை குறைத்த ஐக்கிய அரபு அமீரகம்: விரிவான தகவல்

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

வேலை நேரத்தில் இரண்டு மணி நேரம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் MoHRE என்ற மனித வள அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்லாமிய புனித மாதத்தில் மட்டும் வேலை நேரத்தில் இரண்டு மணி நேரம் குறைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுடன் கலந்தாலோசித்து உரிய முடிவெடுக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் துறை ஊழியர்கள் நாளுக்கு 8 முதல் 9 மணி நேரம் வேலை செய்வார்கள்.

ஆனால் ரமலான் மாதம் என்பதால், தற்போது இதில் 2 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், குறைக்கப்பட்ட வேலை நேரத்திற்கு அப்பால் பணிபுரியும் கூடுதல் மணிநேரம் OT என கருதப்படலாம், அதற்காக ஊழியர்கள் கூடுதல் இழப்பீடு பெற உரிமை உண்டு என்றும் அமைச்சரகம் குறிப்பிட்டுள்ளது.

மதியம் 2.30 மணி வரையில்
மார்ச் 12ம் திகதி முதல் ரமலான் மாதம் துவங்குகிறது. குறைக்கப்பட்ட இந்த வேலை நேரமானது ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் மற்றும் நோன்பு நோற்காத ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ரமலான் மாதத்தில் அமைச்சரகம் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் அனைத்தும் திங்கள் முதல் வியாழன் வரையில் பகல் 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரையில் மட்டுமே இயங்கும். வெள்ளிக்கிழமை மட்டும் பகல் 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *