முகப்பருவை அடியோடு விரட்டும் எளிய முறைகள்
முகப்பருக்கள் ஒருவரது முகத்தில் மட்டுமல்லாது அவரது மனதிலும் பெரிய வடுவை ஏற்படுத்துகிறது. முகப்பருக்கள் குறித்து எப்போதுமே கவலைப்படும் நபர்கள் இதன் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
முகப்பரு என்பது பொதுவான ஒரு சரும நிலைதான். அனைத்து வயதினருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் முகப்பரு ஏற்படுகிறது.
அந்த வகையில் எளிய முறையில் வீட்டு வைத்தியம் செய்து எப்படி முகப்பருவை விரட்டலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
முகப்பரு
1. நீங்கள் தினமும் ஒரு கரட் மற்றும் ஆரஞ்சு பழம் ஒன்றை சாப்பிட்டு வர வேண்டும். இது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி முகப்பரு வராமல் பாதுகாக்கும்.
கீரை, முட்டைகோஸ், முட்டை போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும் மற்றும் பப்பாசி, மாதுளை சாப்பட்டு இளநீர் குடிக்க வேண்டும். இதனால் உடல் சூடு தணிந்து முகப்பருவில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.
2. எலுமிச்சை சாறுடன் தேன் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் நேரடியாக தடவ வேண்டும். பின்னர் இதை அரை மணி நேரம் ஊறவைத்து நீரினால் கழுவிக்கொள்ள வேண்டும்.
இதே போல் தேனை முகத்தில் தடவி அரை மணிநேரம் வைத்து விட்டு கழுவினால் முகம் பளிச்சென்று வரும், முகப்பரு கிட்ட கூட வராது.
3.தினமும் காலையில் கரட் ஜீஸ் மற்றும் மாலையில் கொத்தமல்லி கசாயம் குடித்து வந்தால் உடல் சூட்டை தணித்து ரத்தத்தை சுத்தப்படுத்தி முகப்பருவை வர விடாது.
இதை தடவியதும் சோப் கொண்டு கழுவாமல் Face Wash கொண்டு கழுவினால் முகம் பளபளப்பாக வரும், இதை நீங்கள் தினமும் செய்யலாம்.