தவறியும் கூட பாகற்காய் கொடியை வீட்டில் நடாதீர்கள்… ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே வீட்டில் தாவரங்கள் வளர்ப்பதால் காற்று துய்மையாக்கப்படுகின்றது. இதனால் சீரான சுவாசம் கிடைக்கின்றது.
மேலும் சில தாவரங்கள் நேர்மறை ஆற்றலை ஈர்க்கின்றது. எனவே இவ்வாறான தாவரங்களை வீட்டில் வைத்திருப்பதால் மன அமைதி கிடைப்பதுடன் நேர்மறையான சிந்தனைக்கு துணைபுரியும்.
ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சில தாவரங்களை வளர்ப்பது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பாக வீட்டில் பாகற்காய் கொடியை வளர்ப்பது நல்லதல்ல என்ற கருத்து காணப்படுகின்றது இதற்கான காரணங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
பாகற்காய் கொடி எதிர்மறை ஆற்றலை ஈர்க்குமா?
பாகற்காய் கொடியை வீட்டில் வளர்ப்பதால் வீட்டின் நிதி நிலைமை மோசமடையும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதற்காகவே முன்னோர்கள் அதைனை வீட்டில் வளர்க்க கூடாது என சொல்லி வைத்திருக்கின்றார்கள்.
பாகற்காய் செடியால் ஏற்படும் தீமைகள் பாகற்காய் செடி கசப்பாக இருப்பதால் அதிலிருந்து வெளிப்படும் ஆற்றலும் எதிர்மறையானதாக இருக்கும்.
அதனால் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் ஈர்க்கப்படும். எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும் பட்சத்தில் வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் இடையே சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும்.
இதனால் ஒற்றுமை பாதிக்கப்படும். மேலும் வீட்டில் பாகற்காய் கொடியை நடுவது குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்திலும் தடைகளை உருவாக்கும் என்பது ஐதீகம்.
பாகற்காயில் இருந்து வெளிவரும் ஆற்றலும் உளஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன் இந்த கொடி வீடடில் இருந்தால் நிதி நெருக்கடி அதிகரிக்கும்.
அப்படியும் பாகற்காய் கொடியை வீட்டில் வளர்க்க நினைத்தால் அதை உங்கள் வீட்டிற்கு சற்று தூரமாக திறந்தவெளியில் வளர்க்கலாம். அதன் மூலம் குடும்பத்திற்கு ஏற்படும் எதிர்மறை விளைவுகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.