மஹாசிவராத்திரி: இந்த செடிகளை வீட்டில் நடுங்கள்.. செல்வம் கொழிக்கும்
ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமான் ஜோதி வடிவானவர் இன்று இந்து மதத்தில் குறிப்பிடப்படுகின்றது.
இந்துக்களை பொருத்த வரையில் சிவபெருமான் கடவுள்களின் கடவுள் என கொண்டாடப்படுகின்றார்.
சிவபெருமான் தன்னை வணங்குபவர்களக்கு மாத்திரதன்றி அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்பவர் என இந்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
மகாசிவராத்திரி நாளில் சிவபெருமானையும், பார்வதி தேவியை மனதார நினைத்து தனது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என விரதம் இருப்பது இந்துக்களின் வழக்கம்.
மகாசிவராத்திரி நாளில் தினத்தில் விரதம் இருப்பதால் சிவபெருமானின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
மஹாசிவராத்திரியின் போது சில சிறப்பு தாவரங்களை வீட்டில் நட்டு வைத்தால் இது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் அகன்று மன அமைதி கிடைக்கும் என இந்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.அத்தகைய சிறப்பு வாய்ந்த தாவரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஊமத்தம் செடி
பொதுவாகவே முள் செடிகளை வீட்டில் நடுவது பாதகமான விளைவுகளை கொடுக்கும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தாதுரா என்னும் ஊமத்தம் செடியை வீட்டில் நடுவதால் மகிழ்ச்சியும் செல்வமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
மஹாசிவராத்திரி நாளில் இந்த ஊமத்தம் செடியை உங்களின் வீட்டில் நடுவதால் சிவபெருமானின் அருள் முழுமையாக கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
வில்வ மரம்
ஜோதிட சாஸ்தின் அடிப்படையில் வில்வ செடியை வீட்டின் வடக்கு-தெற்கு திசையில் நடுவது மங்களகரமானது என குறிப்பிடப்படுகின்றது. மேலும் அதன் இலைகள் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்ததாக கருதப்படுகின்றது.
மஹாசிவராத்திரி தினத்தில் வீட்டில் ஒரு விலவ செடியை நடுவது மிகுந்த செல்வ செழிப்பை பெற்றுத்தரும்.
வன்னி மரம்
சிவபெருமானுக்கும் வன்னி செடி மிகவும் பிடித்தமானது என இந்து மத ஆகமங்களில் குறிப்பிடப்படுகின்றது. எனவே மஹாசிவராத்திரி தினத்தில் வீட்டில் ஒரு வன்னி மர செடியை நட்டுவைப்பது சிறந்த பல கொடுக்கும்.