இணையத்தை ஆக்கிரமிக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள்… குவியும் லைக்குகள்
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ராஷ்மிகா மந்தனா
நேஷனல் கர்ஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. 2016ஆம் ஆண்டு ‘கிரிக் பார்ட்டி’கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானார்.
இதன்பின் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இன்றுவரை நீங்காத இடம் பிடித்துள்ளார்.
பின்னர் தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.நடிகை ரஷ்மிகா தனது இயற்கை அழகால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அனிமல்’ திரைப்படம் பல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. அடுத்து அவரின் நடிப்பில் ‘புஷ்பா 2’, ‘ரெயின்போ’ போன்ற படங்கள் தயாராகி வருகின்றன.