சாந்தனின் உடல் இலங்கையில் அடக்கம் செய்யப்பட்டது..!
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களுடைய கொலை வழக்குத் தொடர்பில் நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்தவர் சாந்தன்.அதன் பின் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள் தமது குடும்பங்களோடு இணைந்து வாழ வழியேற்படுத்தி கொடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது .
இந்நிலையில் ,கல்லீரல் பாதிப்பு காரணமாக சாந்தனின் உடல் நிலை மிக மோசமாக சென்றது .சாந்தனின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டும் இந்த அவசர சூழ்நிலையை கவனத்தில் எடுத்தும் மத்திய அரசும், தமிழக அரசும், இலங்கை அரசும் உடனடியாக பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொண்டு சாந்தனை ஆபத்தான நிலையிலிருந்து மீட்டெடுத்து இலங்கைக்கு அனுப்பி வைக்க பல தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் திருச்சி முகாமில் இருந்த சாந்தனை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.ஒரு மாதம் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி சாந்தன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் மரணமடைந்த சாந்தனின் உடல், இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இலக்கணாவத்தையில் உள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடந்ததுபின்னர் ஊர்வலமாக எடுத்துச் (santhan funeral) செல்லப்பட்டு எள்ளங்குளம் என்ற இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.