ஒரே ஃபிரேமில் ரஜினிகாந்த் – பகத் பாசில் : வேட்டையன் புகைப்படம் வைரல்
ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில் பகுதியில் நடைபெற்று வரும் நிலையில், நகர் விஜயகாந்தின் திடீர் மரணம் காரணமாக ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார்.
ஜெயிலர் படத்திற்கு பின் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன். டி.ஜே.ஞானவேல் இயக்கி வரும் இந்த படத்தில் மஞ்சுவாரியார், ரித்திகா சிங், ராணா, பகத் பாசில், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
திருவனந்தபுரத்தில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி நெல்லை, மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிலையில், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நாகர்கோவில் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் ரஜினிகாந்த் பகத் பாசில் இருவரும் ஒரு ஃபிரேமில் இருக்கின்றனர்.
#SuperstarRajinikanth canceled his movie #Vettaiyan shoot in Nagerkovil and is rushing back to Chennai to pay his homage to Captain #Vijayakanth
— Ramesh Bala (@rameshlaus) December 28, 2023
இவர்களை பார்க்க ரசிகர்கள் கூட்டம் படப்பிடிப்பு தளத்தில் அலைமோதிய நிலையில்,
விஜயகாந்தின் மரண செய்தியை கேட்ட ரஜினிகாந்த் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இது குறித்து வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
, “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகர்கோவிலில் தனது வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த சென்னைக்கு விரைகிறார்” என்று எழுதினார்.
\இந்த பதிவை பார்த்த ரசிகர் ஒருவர், “ரஜினியின் சிறந்த செயல் என்று” என்று பதிவின் கீழ் சைகை செய்ததற்காக பாராட்டியுள்ள நிலையில், மற்றொரு ரசிகர், “அவரது அன்பு நண்பர், ஒரு தலைவரின் ரசிகராக அவர் அவ்வாறு செய்யாவிட்டால் நான் ஏமாற்றமடைவேன்” என்று கூறியுள்ளார.
#Vettaiyan 🌟 – Thalaivar #Rajinikanth & #FahadFasil spotted together.
Most probably a montage ❤️ wholesome. pic.twitter.com/Q3t8Y2ogjJ
— Rana Ashish Mahesh (@RanaAshish25) December 27, 2023
இதனிடையே படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படத்தில், ரஜினிகாந்த் மற்றும் பகத் பாசில் ஒரு வீட்டிற்கு வெளியே படப்பிடிப்பைப் பார்க்கிறது. ரஜினிகாந்த் ஒரு படக்குழுவினருடன் பேசிக்கொண்டிருக்கிறார். பகத் பாசில் அந்தக் காட்சிக்குத் தயாராகி வருகிறார். மற்ற மற்ற படக்குழுவினர் அவர்களுக்கு அருகில் கூட்டமாக இருப்பதைக் காணலாம், வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள குடை பிடித்துள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தலைவரும் பகத்தும் ஒரே ஃ.பிரேமில் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.