5000 ரூபாய் பென்சன் வேணுமா? உடனே இந்தத் திட்டத்தில் சேருங்கள்..!
ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையைச் சேமித்து உங்கள் முதுமைக் காலத்தை பொருளாதார ரீதியாக வளப்படுத்தலாம்.
அப்படிப்பட்ட ஒரு திட்டம்தான் அடல் பென்சன் யோஜனா திட்டம். இத்திட்டத்தில் முதலீடு செய்தால் முதுமைக் காலத்தில் பண நெருக்கடி இல்லாமல் சமாளிக்கலாம். இந்த ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு நடத்துகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய தொகையைச் சேமித்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். உங்கள் முதலீட்டைப் பொறுத்து உங்களுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரை பென்சன் கிடைக்கும்.
இத்திட்டத்தில் இணைய விரும்புபவர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தாதாரர்கள் தங்கள் 60 வயது வரை பணம் செலுத்தி சேமிக்க முடியும்.பயனர்கள் செலுத்தும் தொகையை பொறுத்தே அவர்களது 60 வயதுக்கு பிறகு ரூ.1000/- முதல் ரூ.5000/- வரை பென்ஷன் தொகை வழங்கப்படும்.
அடல் பென்சன் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான வயது வரம்பு 18 முதல் 40 ஆண்டுகள் ஆகும். அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதலீடு தேவை. இதற்குப் பிறகு உங்கள் ஓய்வூதியம் வரத் தொடங்கும். நீங்கள் 40 வயதில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் 60 வயது வரை தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். இத்திட்டத்தில் முதலீடு செய்வது உங்களுக்கு உத்தரவாதமான ஓய்வூதியம் மட்டுமல்ல, பல நன்மைகளையும் வழங்குகிறது.
இத்திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1.5 லட்சம் வரை வரியைச் சேமிக்கலாம். இந்த வரிச் சலுகை வருமான வரி பிரிவு 80C-ன் கீழ் வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் இந்தத் திட்டத்தைப் பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். உங்களுக்கு 18 வயது என்றால் இந்த திட்டத்தில் மாதம் ரூ. 210 டெபாசிட் செய்வதன் மூலம் மாதம் 5000 பென்சன் கிடைக்கும். ஒருவேளை மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் வேண்டுமானால் இந்தத் திட்டத்தில் மாதம் ரூ.42 மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும். இவ்வாறு முதலீடு செய்யும் வயது மற்றும் தொகையைப் பொறுத்து உங்களுக்கு பென்சன் கிடைக்கும்.
18 வயதுள்ள ஒருவர் 60 வயதில் ரூ.1,000 பென்ஷன் பெற விரும்பினால், அவர் மாதம் ரூ.42 முதலீடு செய்து வர வேண்டும்… ஆனால், இதுவே 40 வயதில் ஒருவர் இந்த திட்டத்தில் இணையக்கூடும் என்றால், அவர் மாதம் ரூ. 291 கட்ட வேண்டும். இதற்கு நடுவில், அதிக தொகையை கட்டி பென்ஷனை அதிகரித்துக்கொள்ளும் வசதியும் இந்த திட்டத்தில் இருக்கிறது.
அதுமட்டுமல்ல, ஏதேனும் காரணத்தினால் சந்தாதாரர் இறந்துவிட்டால், அவரின் வாழ்க்கை துணைக்கு அந்த பென்ஷன் தொகை வழங்கப்படும்… ஒருவேளை 2 பேருமே இறந்துவிட்டால், அந்த பென்ஷன் தொகை சந்தாதாரரின் நாமினிக்கு வழங்கப்படும்..சந்தாதாரர் 60 வயது பூர்த்தியடையும்போது மட்டுமே இந்த அடல் ஓய்வூதிய திட்டத்திற்கான 100 சதவீதம் பென்ஷன் தொகையையும் இந்த சந்தாதாரர் பெற முடியும்… 60 வயதிற்கு முன்பாகவே சந்தாதாரரால் இந்த திட்டத்திலிருந்து வெளியேற முடியாது. இருந்தாலும், விதிவிலக்குகள் உண்டு.. சந்தாதாரர் இறந்துவிட்டாலோ அல்லது ஏதேனும் மோசமான நோயால் பாதிக்கப்பட்டு இருத்தல் போன்ற அரிதான சூழ்நிலைகளில் மட்டுமே இது ஏற்றுக்கொள்ளக் கூடியது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.