Saturn Rasis: சனி நட்சத்திரம் மாற்றத்தால் யோகம் பெறும் ராசிகள்
நவகிரகங்கள் தங்களது ராசியை மாற்றுவது அவ்வப்போது நடக்கும். ஒவ்வொரு கால இடைவெளியை பொறுத்து தனது ராசி மாற்றுவது போல் நவகிரகங்கள் நட்சத்திரங்களையும் மாற்றுவார்கள். இந்த இடமாற்றத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும்.
அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் ராசி மற்றும் நட்சத்திர மாற்றத்தை மேற்கொள்வார் அப்போது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும்.
சனிபகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார் நவம்பர் 24ஆம் தேதி அன்று ராகு பகவானின் சதய நட்சத்திரத்திற்கு இடம் மாற்றம் செய்தார் ஐந்து மாதங்கள் சனி பகவான் நட்சத்திர பயணத்தில் இருப்பார் வரும் 2024 ஏப்ரல் மாதம் வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். இதனால் கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கே காண்போம்.
ரிஷப ராசி
சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. கடின உழைப்பு நல்ல பலன்களை தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த தொகைகள் உங்களைத் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது நல்லது.
சிம்ம ராசி
சனிபகவானின் நற்குணங்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் இன்பம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் கைகூடும்.
மேஷ ராசி
சனிபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களால் உதவி கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த தொகை உங்களைத் தேடி வரும்.