பா.ஜ.க. சார்பில் நிர்மலா சீதாராமன் புதுச்சேரியில் போட்டி..?

மக்களவை தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பா.ஜ.க. போட்டியிடவுள்ள நிலையில் வேட்பாளரை இறுதி செய்ய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர்கள் மற்றும் மாநில பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமி நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

ராஜீவ் காந்தி சதுக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, பா.ஜ.க. மாநிலத் தலைவர் செல்வகணபதி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க. தெரிவித்த மூன்று வேட்பாளர்களில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பெயர் முதலிடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டியலில் உள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்கள் போட்டியிட தயக்கம் காட்டுவதால் புதுச்சேரி தொகுதியில் நிர்மலா சீத்தாராமன் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *