நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் மூலமே இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம்..!
ரத்த அழுத்தம் சரியாக இருந்தால், உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஒரே சீரான அளவில் ரத்தம் பாயும்.
அப்படி பாயும் ரத்தம், உடல் உறுப்புகளுக்கு தன்னுடன் ஆக்சிஜனையும் கொண்டு சேர்ப்பதால், உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தின் போது, பழைய செல்கள் அழிந்த இடங்களில், புதிய செல்கள் உருவாகின்றன. வளர்சிதை மாற்றம் சரியாக நடைபெற்றாலே, உடலில் எந்த உபாதைகளும் ஏற்படாது என்கிறது மருத்துவ அறிவியல்.
அப்படியானால், அனைத்துக்கும் முக்கியம் சீரான ரத்த ஓட்டம். அதற்கு, ரத்தத்தில் அழுத்தம் ஏற்படாமல் இருக்க வேண்டும். நம்மில் பலருக்கும், பி.பி., எனப்படும் பிலட் பிரஷர், அதாவது ரத்த அழுத்தம் சீராக இல்லாத தன்மை காணப்படுகிறது.
குறிப்பாக, அதிகப்படியானோருக்கு உயர் ரத்த அழுத்தம் காணப்படுகிறது. பெரும்பாலும், 40 வயதை கடந்தவர்களில் பலருக்கு சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயும், ஹை பிலட் பிரஷர் எனப்படும் உயர் ரத்த அழுத்தமும் காணப்படுகிறது.
நம் வீட்டில், சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் மூலமே, இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம். உயர் ரத்த அழுத்தத்தை உடனியாக சீராக்க கீழ்கண்ட முறையை பின்பற்றலாம்.
தேவையான பொருட்கள்: இரண்டு பல் பூண்டு, அரை மூடி எலுமிச்சை, சுடு நீர், தேன் (தேவைப்பட்டால்)
செய்முறை: வீட்டு சமையலில் பயன்படுத்தும் வெள்ளை பூண்டில் இரண்டு அல்லது மூன்று பல் எடுத்துக் கொண்டு, அதை பொடிப்படியாக நறுக்கியோ அல்லது இடித்தோ வைத்துக்கொள்ளவும்.
கொதிக்க வைத்த ஒரு டம்பளர் தண்ணீரில் பூண்டு துண்டுகளை போட்டு, 10 – 15 நிமிடங்கள் அந்த டம்பளரை மூடிவிடவும்.
பின், எழுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி, அரை பழத்தின் சாற்றை எடுத்து, பூண்டு நீருடன் சேர்க்கவும். பின் அதை நன்றாக கலக்கி, வடிகட்டிய பின், உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுவோருக்கு அதை கொடுக்கவும்.
பூண்டும், எழுமிச்சை சாறும் கலந்த கலவையை அப்படியே குடிக்க சிரமப்படுவோர், தேவைப்பட்டால், சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம்.
இந்த எளிய கலவையை குடித்தால், உடனே, ரத்தக் கொதிப்பில் நல்ல மாற்றம் ஏற்படும். இது அனுபவப்பூர்வ உண்மை. இந்த முறையை தினசரி ஒரு முறை கடைபிடித்து வந்தால், எப்படிப்பட்ட ரத்தக் கொதிப்பும் சரியாகி, விரைவில் பூரண நலன் பெறலாம்.
ரத்தக் கொதிப்பிலிருந்து விடுதலை ஆனாலே, பல உடல் உபாதைகளில் இருந்து விடுபட வழிவகை ஏற்படும்.