குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி; இனி இந்த நிகழ்ச்சி கிடையாதாம்
குக் வித் கோமாளி பிரபல நிகழ்ச்சியில் இருந்து தயாரிப்பு நிறுவனம் விலகியுள்ளது.
குக் வித் கோமாளி
இந்திய பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியானது அடுத்தடுத்த சீசன்களாக சென்றுக்கொண்டே தான் இருக்கின்றது. இதன் ஒவ்வொரு சீசனும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதில் பல போட்டியாளர்களும் பல கோமாளிகளும் கலந்துக்கொண்டு வயிறு குலுங்க சிரிக்க வைப்பது வழக்கம்.
சமையல் கலைஞர்களான தாமுவும், வெங்கடேஷ்பட்டும் இதற்கு நடுவர்களாக இருந்து வருகின்றனர்.
வெற்றிகரமாக 4 சீசன்களும் நடந்து முடிந்தது. தற்போது 5 வது சீசன் ஆரம்பமாகவுள்ள நிலையில், தாமுவும், வெங்கடேஷ்பட்டும் நிகழ்ச்சியில் இருந்து விலகினார்கள்.
இந்நிலையில் குக் வித் கோமாளி தயாரிப்பு நிறுவனமும் விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி
வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகிய இரண்டு நடுவர்களும் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு சென்றார்கள். தற்போது அவர்களும் விலகியுள்ளார்கள்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும் விலகி உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
இது குறித்து ரவூஃபா தனது சமூக வலைதளத்தில் கூறிய போது, “கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக நாங்கள் விஜய் டிவியில் மட்டுமே பணிபுரிந்தோம். இது எங்கள் இரண்டாவது வீடு என்றே கருதி வந்தோம். பல நிகழ்ச்சிகளை தயாரித்து பல நட்சத்திரங்களை திரைக்கு கொண்டு வந்தோம்.
இப்போது விஜய் டிவியில் இருந்து பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த மே மாதம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து விலகிய போது இன்னும் எங்களிடம் இரண்டு நிகழ்ச்சிகள் இருந்தன.
ஆனால் தற்போது ’குக் வித் கோமாளி’ மற்றும் ’மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை’ ஆகிய நிகழ்ச்சிகளில் இருந்தும் நாங்கள் எதிர்பாராதவிதமாக விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளை நாங்கள் நான்கு சீசன்களை செய்துள்ளோம். இப்போது கனத்த இதயத்துடன் இந்த இரண்டு நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேறுகிறோம்.
எங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைத்து பார்வையாளர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
எங்களுடன் பயணம் செய்த அனைத்து நட்சத்திரத்திற்கும் எங்களது மனமார்ந்த நன்றி” என தெரிவித்துள்ளார்.
மேலும் வெங்கடேஷ் பட், தாமு ஆகிய நடுவர்களும் விலகியுள்ளனர். இந்நிலையில் தயாரிப்பாளரும் விலகி உள்ளதால் அடுத்த சீசன்கள் நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.