பருத்திவீரன் படத்தில் நடித்த சின்ன வயசு முத்தழகு சிறுமியா இது?- ரீசென்ட் போட்டோ
அமீர் இயக்கத்தில் 2007-ம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியான திரைப்படம் “பருத்திவீரன்”.
நடிகர் கார்த்தி, பிரியாமணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு என பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருப்பார்.
இந்த பருத்திவீரன் திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.
மதுரை மண்வாசத்தை, வீரத்தை, திமிரும் கோபத்தையும் கண்முன் கொண்டு வந்திருப்பார் இயக்குநர் அமீர்.
இன்றும் பிரியாமணியை தமிழ் ரசிகர்கள் “முத்தழகு” என்று தான் அடையாளம் கொள்வார்கள். அந்த அளவுக்கு முத்தழகு கதாபாத்திரம் மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்டது.
படத்தின் பாடல்கள் மக்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. படம் வெளியாகி 17 வருடங்கள் ஆனபோதிலும், மக்கள் இன்றும் பார்த்து வியக்கக்கூடிய படமாக இருக்கிறது.
இந்த படத்தில் “அறியாத வயசு புரியாத மனசு” பாடலில் சின்னவயது முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்த சிறுமியின் ரீசென்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
அந்த பாடலில் வரும் சிறுவயது முத்தழகுவின் ரீசென்ட் போட்டோ ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.