விஜய ஏகாதசி 2024… மகாவிஷ்ணுவின் அருளை பரிபூரணமாக பெற… செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்
Vijaya Ekadashi 2024: இந்து மதத்தில் பலவிதமான விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன என்றாலும், ஏகாதசி விரதத்திற்கு ஒரு தனி சிறப்பு உண்டு. விரதங்களில் ஏகாதசிக்கு இணையான விரதம் எதுவும் இல்லை என புராணங்கள் கூறுகின்றன. வளர்பிறை தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு முறை ஏகாதசி திதி வருகிறது. விஜய ஏகாதசி விரதத்தை, 2024 மார்ச் மாதம் 6ஆம் தேதி அனுசரிப்பதால், மகாவிஷ்ணுவின் அருளோடு, அன்னை மகாலட்சுமியின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.
ஒவ்வொரு ஏகாதசிக்கும், ஒரு தனிப்பட்ட பெயரும் தனிச்சிறப்பும் உண்டு. அந்த வகையில், மாசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு விஜய ஏகாதசி என்ற பெயர். வழிபாட்டிற்கு சிறந்த மாசி மாதத்தில் வரும், இந்த விஜய் ஏகாதசி அன்று, விரதம் இருப்பதன் மூலம், வாழ்க்கையில் செல்வ வளம் வெற்றி, நிம்மதி, ஐஸ்வர்யம், அதிர்ஷ்டம் (LUCK) என அனைத்தையும் பெற்று சிறப்பாக வாழலாம்.
ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பதால், மனம் தூய்மை அடைகிறது. கோபம் வெறுப்பு, குழப்பம் ஆகிய அனைத்தும் நீங்கி மனதில் நிம்மதியான உணர்வு ஏற்படும். நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகி, வாழ்க்கையில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் அடையலாம். ஏகாதசி அன்று உணவு கட்டுப்பாடுடன் கூடவே, மனதை ஒருநிலைப்படுத்தி நாள் முழுவதும் விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னில் அடங்காதது.
ஏகாதசி விரதம் கடைபிடிக்கும் போது, செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்
செய்ய வேண்டியவை
1.ஏகாசி திருநாளில், அதிகாலையில் குளித்து, மகாவிஷ்ணுவை பூஜித்து வழிபட வேண்டும்.
2. அன்று முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது என்றாலும், உங்கள் உடல் நிலைக்கு ஏற்ப உப்பு சேர்க்காத எளிமையான உணவுகள், மகாவிஷ்ணுவுக்கு ஆகியவற்றை உண்ணலாம்.
3. விரத காலத்தின் போது, தூங்காமல் விழித்திருந்து, மகாவிஷ்ணுவின் ஸ்தோத்திரங்களை கூறுவதும், மகாவிஷ்ணுவை போற்றி பாடுவதும், மனதிற்கு நிம்மதி உணர்வை கொடுக்கும்.
4. ஏகாதசி விரதம் முடிந்து மறுநாள் துவாதசி தினத்தன்று, ஏழைகளுக்கு அன்னதானம் செய்த பின், நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை கொண்டு சமைக்கப்பட்ட உணவை அருந்தி விரதத்தை முடிப்பது சிறப்பு.
5. ஏகாதசி விரதத்தன்று, துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மகாவிஷ்ணு வாசம் செய்வதால், துளசி இலைகளை அன்று பறிக்காமல் இருப்பது நல்லது.
ஏகாதசி விரதத்தின் போது செய்யக்கூடாதவை
1. ஏகாதசி விரதம் இருக்கும் போது கேளிக்கை விருந்து போன்றவற்றில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
2. மது அருந்துதல், புலால் உண்ணுதல் ஆகியவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
3. ஏகாதசி விரதத்தன்று, வெங்காயம் பூண்டு போன்ற தாமச உணவுகளை உட்கொள்ளக் கூடாது.
4. பெரியவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும். பிறருடன் வாக்குவாதம் அல்லது சண்டையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.