15 நாட்களுக்குள் இரு கிரகணங்கள்! ஜாலியாக வாழ்க்கையை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள்!

இந்து மதத்தில் சூரியன் மற்றும் சந்திரனுக்கு முக்கியத்துவம் உண்டு. இயற்கையை தெய்வங்களாக பார்க்கும் நம் நாட்டில் நிலவும் சூரியனும், சூரிய தேவன், சந்திரன் என கடவுள் அந்தஸ்து பெற்றுள்ளன. ஜோதிட சாஸ்திரப்படி, சந்திரன் மற்றும் சூரியன் ஒருவரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். எனவே, சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஏற்படுவது, அனைவரின் வாழ்க்கையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில் 2024ம் ஆண்டு மொத்தம் இரண்டு சூரிய கிரகணம், இரண்டு சந்திர கிரகணம் என மொத்தம் நான்கு கிரகணங்கள் ஏற்பட உள்ளது.​ முதல் சந்திர கிரகணம் மார்ச் 25ஆம் தேதி, திங்கட்கிழமையன்று ஏற்படுகிற்து. இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது என்றாலும், அது ஜோதிட ரீதியாக தாக்கங்களை ஏற்படுத்தும். ஆனால், மகா சிவராத்திரி வரும் இந்த மாசி மாதத்தில் சிவனை கும்பிட்டால் நவகிரக நாயகர் அருள் பாலிப்பார் என்பதும் இந்தியர்களின் நம்பிக்கை ஆகும்.

அதே போல இந்த ஆண்டில் ஏப்ரல் 8ம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த கிரகணம் இந்திய நேரப்படி மாலை 4.38 மணிக்கு தொடங்கி இரவு 8.52 மணிக்கு முடிவடைவதால், இந்தியாவில் இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாது.

சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் 15 நாட்களுக்குள் நிகழ்வதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அள்ளும் என்றால், சிலருக்கு மந்தமான பலன்கள் இருக்கும், எஞ்சியவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம்.

15 நாட்களுக்கும் நடைபெறும் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தால் 4 ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும். அந்த ராசிகளில் உங்களுடையதும் இருக்கிறதா? தெரிந்துக் கொள்ளுங்கள்…

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகிய இரண்டும் சுப பலன்களைத் தரும். இந்த கிரகணம் இவர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் தரும். லாபம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் சித்திக்கும்

மிதுன ராசி

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் சூரிய கிரகணமும் மிதுன ராசியினருக்கு சிறப்பாக அமையும். நிலுவையில் உள்ள பணம் கிடைக்கும், வாராக்கடன்கள் வந்து சேரும். நிதி நிலைமை மேம்படும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

சிம்ம ராசி

2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு கிரகணங்களும் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையே அளிக்கும். நீண்டகாலமாக தொடர்ந்து வந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். இனி வாழ்க்கையில் நல்ல நாட்கள் வருவதற்கான அறிகுறிகள் தெரியும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அதிகமாக தென்படுகின்றன.

தனுசு ராசி

15 நாட்களுக்குள் நிகழும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். புதிய வேலையைத் தொடங்க நல்ல நேரம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *