கூடுதல் வேரியண்டுகளுடன் 2024 எம்ஜி ஹெக்டர் காரின் விலை குறைப்பு
எம்ஜி மோட்டார் நிறுவனம் புதிதாக ஹெக்டர் காரில் சைன் ப்ரோ மற்றும் செலக்ட் ப்ரோ என்ற இரண்டு வேரியன்ட்டுளை ஏற்கனவே, விற்பனையில் உள்ள ஸ்டைல் வேரியண்டிற்கு மேலாக அறிமுகம் செய்துள்ளது. 6 மற்றும் 7 இருக்கை பெற்ற ஹெக்டர் பிளஸ் காரிலும் கூடுதலாக சில வேரியண்ட் மாற்றங்களும் பெற்றுள்ளன.
MG Hector
சமீபத்தில் எம்.ஜி ஹெக்டர் காரின் விலை ஆனது ரூபாய் 13.99 லட்சம் ஆக குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக இரண்டு வேரியண்ட் இந்த காருக்கு மேலும் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு காரணமாக அமைந்திருக்கும்.
ஹெக்டரின் சைன் ப்ரோ மற்றும் செலக்ட் ப்ரோ வசதிகள்;-
இரண்டு புதிய வகைகளிலும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே இணைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் ஆகியவற்றுடன் கூடிய பெரிய 14-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.
சைன் ப்ரோ வேரியண்டில் சிங்கிள் பேன் மட்டுமே சன்ரூஃப் பொருத்தப்பட்டுள்ளது.
செலக்ட் ப்ரோ வேரியண்டில் அகலமான டூயல்-பேன் பனோரமிக் சன்ரூஃப் பெற்று கூடுதலாக, எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப், சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர், எல்இடி டெயில்லைட் மற்றும் கதவு கைப்பிடிகளில் குரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு மாடலிலும் 143hp, 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 6-ஸ்பீடு மேனுல் மட்டுமே பெற்றுள்ள 170hp, 2.0-லிட்டர் டீசல் எஞ்சினும் உள்ளது.
2024 எம்ஜி ஹெக்டர் விலை பட்டியல் பின் வருமாறு ;-
5 இருக்கை எம்ஜி ஹெக்டர் ரூ.13.99 லட்சம் முதல் ரூ.21.95 லட்சம் வரை
6 இருக்கை மற்றும் 7 இருக்கை எம்ஜி ஹெக்டர் பிளஸ் ரூ.17 லட்சம் முதல் ரூ.22.68 லட்சம் வரை உள்ளது.