2024 டாடா மோட்டார்சின் டார்க் எடிசன் விற்பனைக்கு அறிமுகமானது
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டார்க் எடிசன் எனப்படுகின்ற சிறப்பு மாடல் மூலம் நெக்ஸான், நெக்ஸான்.இவி, ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய நான்கும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
சாதரண மாடலை விட ரூ.35,000 வரை விலை அதிகரிக்கப்பட்டு 2024 டாடா நெக்ஸான் டார்க் எடிசனின் ஆரம்ப விலை ரூ.11.45 லட்சம் முதல் ரூ.13.80 லட்சம் வரையும், நெக்ஸான்.இவி டார்க்கின் ஆரம்ப விலை ரூ.19.49 லட்சம் ஆகும். இதுதவிர ஹாரியர் டார்க்கின் ஆரம்ப விலை ரூ. 19.99 லட்சம் மற்றும் சஃபாரி எஸ்யூவி ஆரம்ப விலை ரூ.20.69 லட்சம் ஆகவும் துவங்குகின்றது.
நெக்ஸானில் க்ரீயேட்டிவ், ஃபியர்லெஸ் வேரியண்டுகளுக்கு மட்டும் கிடைக்கின்ற இந்த சிறப்பு பதிப்பு ஆனது 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் பெற்று 5 வேக மேனுவல், 6 வேக மேனுவல், 7வேக டிசிடி, ஏஎம்டி கியர்பாக்ஸூம் உள்ளது. 1.5 லிட்டர் டீசல் என்ஜின கொண்டு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷனும் உள்ளது.
நெக்ஸான்.இவி LR 40.5kWh வேரியண்டின் விலை ரூ.10,000 வரை உயர்த்தப்பட்டு ரூ.19.49 லட்சத்தில் துவங்கி 465 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்துகின்றது.
குறிப்பாக இந்த மாடல்கள் கருப்பு நிற அலாய் வீல், கருமையான ரூஃப் ரெயில் மற்றும் கருமை நிற டாடா லோகோவுடன் முழுமையான கருப்பு வண்ணத்தை மையமாக கொண்டுள்ளன. உட்புறம் கருப்பு நிற தீம், கருப்பு லெதரெட் இருக்கைகள், டாஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.