IPL 2024 : 4 அணிகளின் கேப்டன்கள் அதிரடி மாற்றம்.. 2024 ஐபிஎல் கேப்டன்கள் பட்டியல்.. முழு விவரம்

2024 ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகள் தங்கள் கேப்டன்களை மாற்றி உள்ளன. மேலும், காயத்தில் இருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட் போட்டிகளில் ஆடுவாரா? என தெரியாமல் தவித்து வருகிறது டெல்லி கேபிடல்ஸ் அணி.

2023 ஐபிஎல் தொடரில் இருந்த கேப்டனை மாற்றி விட்டு புதிய கேப்டனோடு 2024 ஐபிஎல் தொடரை சந்திக்க இரண்டு அணிகள் முடிவு செய்துள்ளன. அதில் முக்கியமான அணி மும்பை இந்தியன்ஸ். தங்கள் அணிக்கு ஐந்து ஐபிஎல் கோப்பைகள் பெற்றுக் கொடுத்த ரோஹித் சர்மாவை நீக்கி விட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்து இருக்கிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவைத் தான் மும்பை அணி தங்கள் அணிக்கு வரவைத்து கேப்டனாக நியமித்தது. எனவே, குஜராத் அணி சுப்மன் கில்லை கேப்டனாக நியமித்துள்ளது. அவருக்கு இதுவே முதல் கேப்டன் அனுபவம்.

அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அந்த அணி தங்களின் கேப்டனான எய்டன் மார்கிரமை நீக்கி விட்டு, ஆஸ்திரேலிய அணிக்கு 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வென்று கொடுத்த பாட் கம்மின்ஸ்-ஐ கேப்டனாக நியமித்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஆஸ்திரேலிய அணிக்கே பாட் கம்மின்ஸ் டி20 அணிக்கு கேப்டனாக இருப்பதில் விருப்பம் இல்லை. ஆனாலும், பாட் கம்மின்ஸ் ஒரு நல்ல கேப்டனாக இருப்பார் என சன்ரைசர்ஸ் அணி நம்பி அவரை கேப்டனாக நியமித்துள்ளது.

டெல்லி அணி கேப்டன் குறித்து முடிவு செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. அவருக்கு நடந்த விபத்தின் காரணமாக அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டு இருந்ததால் அப்போது அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை.

தற்போது உடற்தகுதி சோதனைக்காக ரிஷப் பண்ட் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுள்ளார். அங்கே அவர் போட்டிகளில் ஆட தேவையான உடற்தகுதி இருப்பதாக அறிக்கை அளிக்கப்பட்டால் அவர் 2024 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக நீடிப்பார். இந்த நான்கு அணிகளை தவிர வேறு எந்த அணியும் கேப்டனை மாற்றவில்லை.

2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் பட்டியல் –

சென்னை சூப்பர் கிங்ஸ் – தோனி

மும்பை இந்தியன்ஸ் – ஹர்திக் பாண்டியா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பாப் டுப்லேசிஸ்

டெல்லி கேபிடல்ஸ் – ரிஷப் பண்ட்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பாட் கம்மின்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஸ்ரேயாஸ் ஐயர்

ராஜஸ்தான் ராயல்ஸ் – சஞ்சு சாம்சன்

குஜராத் டைட்டன்ஸ் – சுப்மன் கில்

பஞ்சாப் கிங்ஸ் – ஷிகர் தவான்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – கே எல் ராகுல்

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *