பிரிட்டனில் இருந்து ஈஷா அம்பானி கொண்டு வரும் பிரபல பேஷன் பிராண்டு – Asos
ரிலையன்ஸ் ரீடைல், பிரிட்டன் ஆன்லைன் ஃபாஸ்ட்-ஃபேஷன் சில்லறை விற்பனையாளரான Asos Plc உடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையே சிறிது காலமாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, இருந்தாலும் இது தொடர்பாக எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. ஒப்பந்தம் முடிவடையும் பட்சத்தில், விற்பனை மற்றும் கடைகளில் நாட்டின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளரான ரிலையன்ஸ் ரீடெய்லுடன் இந்தியாவில் பங்குதாரராக ஆசோஸ் உலகளாவிய பிராண்டுகளின் லீக்கில் சேரும்.
ஊடக ஊகங்கள் மற்றும் வதந்திகள் குறித்து நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாக வைத்துள்ளோம். எங்கள் நிறுவனம் பல்வேறு வாய்ப்புகளை தொடர்ந்து மதிப்பீடு செய்கிறது என்று ரிலையன்ஸ் ரீடைல் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் Asos தயாரிப்புகளை Ajio.com மூலமாகவும், ஆஃப்லைனில் அதன் சென்ட்ரோ டிபார்ட்மென்ட் ஸ்டோர் தொடர்புகள் மூலமாகவும் விற்பனை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் இந்தியாவில் அசோஸ் பிராண்டட் ஸ்டாண்டலோன் ஸ்டோர்களையும் தொடங்கலாம். ரிலையன்ஸ் அஜியோ மற்றும் கடைகளில் அசோஸ் தயாரிப்புகளை விற்கும், ஆனால் பிரத்யேக அசோஸ் இந்தியா ஒரு இ-காமர்ஸ் தளம் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்.
அசோஸ் பல ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து அதிகப்படியான பொருட்களை வாங்கி வருவதாகவும், இந்த நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் ஒப்பந்தம் அசோஸ் நிலையாக இந்தியாவில் தனது பிராண்டை விரிவாக்கும் என கூறப்படுகிறது.
Asos என்பது அஸ் சீன் ஆன் ஸ்கிரீன் என்பதன் சுருக்கம் ஆகும். கோவிட்-க்கு பிந்தைய பெரிய போட்டி மற்றும் விற்பனையாகாத சரக்குகளின் மத்தியில் குறைந்த வணிகத்துடன் போராடி வருகிறது. குறிப்பாக ரிலையன்ஸ் ரீடைல் போன்ற ஒரு நிறுவனத்துடன் இங்கிலாந்து பிராண்டுக்கு இங்கு விற்பனையை அதிகரிக்க இந்தியா சிறந்த மார்க்கெட்டாக இருக்கும் என்று வணிக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இங்கிலாந்தில் உள்ள அதன் சொந்த சந்தையில், Marks & Spencer, Zara, H&M மற்றும் Primark போன்ற மாபெரும் சில்லறை விற்பனையாளர்களுடனும் Boohoo.com, Shein மற்றும் Temu போன்ற ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களுடனும் அசோஸ் போட்டியிடுகிறது.
ஏற்கெனவே பிரைமார்க் பேஷன் பிராண்டுடன் ஒப்பந்தம் செய்து அவற்றின் தயாரிப்புகளை இந்தியாவில் சந்தைப்படுத்துவதற்கான ஒரு ஒப்பந்தத்தை இஷா அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.