ஆனந்த் அம்பானி கட்டியிருந்த வாட்ச் விலை என்ன..? வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!!
முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானி, தனது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் போது, உலகிலேயே வெறும் 10 மாடல்களே இருக்கும் ரிச்சர்ட் மில்லே RM 56-02 கைக்கடிகாரத்தை அணிந்திருந்தார். இது மிகவும் அரிதான கைக்கடிகாரம் ஆகும்.
ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்துக்கு முந்தைய விழாக்கள், 3 நாட்கள் உலகமே வியக்கும் வகையில் குஜராத் ஜாம்நகரில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த விழாவை பற்றி உலகமே வியந்து பேசியது.
இந்த 3 நாள் விழாவுக்காக ஒட்டுமொத்த ஜாம்நகரும் ஸ்மார்ட்சிட்டியாக மாறியது. ஒருபக்கம் ஆடம்பரம், பிரமிப்பு என வியக்கவைக்க, மறுபுறம் அம்பானி குடும்பம் கண்ணீர், பாசம் கரைபுரண்டு ஓடியது.
ஆனந்த் அம்பானி உருவாக்கிய வனந்தரா-வில் மரங்கள் விலங்குகளுக்கு மத்தியில் 3 நாள், 3 விதமான தீம்-ல் இந்த பிரம்மாண்ட விழா நடந்து முடிந்து செலிப்ரிட்டிகளும், வர்த்தக தலைவர்களும் அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட்டாலும் இதன் தாக்கம் மக்கள் மத்தியில் குறையவில்லை.
இந்த விழாவில் பல வீடியோ டிரெண்டான நிலையில் மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகியோர் அனந்த் அம்பானி கையில் கட்டியிருந்த வாட்ச்-ஐ வியந்து பேசிய வீடியோ செம டிரெண்டானது.
ஆனந்த் அம்பானி கட்டியிருந்தது Richard Mille வாட்ச், முழுமையான sapphire கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும் இந்த RM 56-02 கைக்கடிகாரம், 5ம் தர டைட்டானியத்தால் செய்யப்பட்ட அடிப்பகுதியைக் கொண்டுள்ளது. 0.35 மிமீ தடிமன் கொண்ட ஒரே ஒரு கயிற்றால் தொங்கவிடப்பட்டிருக்கும் இந்த கைக்கடிகாரம், நவீன வடிவமைப்பையும் கொண்டுள்ளது.
இது நேரத்தை துல்லியமாகக் காண்பிப்பதற்காக, புவி ஈர்ப்பு விசையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் “டூரில்லியன் இஸ்கேப்மெண்ட்” (tourbillon escapement) என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
ரிச்சர்ட் மில்லேவின் RM 56-02 வாட்ச், உயர்தர கைக்கடிகாரத் தயாரிப்பு (haute horology) மற்றும் நவீன அழகியல் ஆகியவற்றின் கலவையாகும்.
இந்த வாட்சின் தனித்தன்மை மற்றும் தொழில்நுட்ப மேன்மை ஆகியவை அதன் மிக அதிகமான விலைக்குக் காரணமாக இருக்கிறது. இதன் விலை 2.2 மில்லியன் டாலர் அதாவது ரூ. 18.2 கோடி (வரி இல்லாமல்).
இதுவரை கைக்கடிகாரங்களில் ஆர்வம் காட்டாத மார்க் ஜுக்கர்பெர்க் கூட, “இதைப் பார்த்த பின்னர், நானும் கைக்கடிகாரங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன்” என்று கூறினார். மார்க் ஜூக்கர்பெர்க்கின் இந்த வார்த்தை இந்த வாட்சின் தனித்தன்மையை மேலும் உறுதிப்படுத்துகிறது.
பொதுவாகப் பயன்படுத்தப்படும் பிளாட்டினம் மற்றும் தங்கம் போன்ற உயர்தர உலோகங்களைத் தவிர்த்து, கார்பன் நானோ டியூப்கள், தங்கம் கலந்த கார்பன் மற்றும் குவார்ட்ஸ் போன்ற புதுமையான பொருட்களை ரிச்சர்ட் மில்லே தனது கைக்கடிகாரங்களில் பயன்படுத்துகிறது.