வீடியோ – ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய ரோகித் சர்மா.. அம்பானி வீரர்னா சும்மாவா.. வேற லெவல் மாஸ்
இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே மூன்றுக்கு ஒன்று என்ற கைப்பற்று இருந்தாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா முதல் இரண்டு இடங்களை பிடிக்க வேண்டும் என்றால் இந்த கடைசி போட்டியிலும் வெற்றி பெறுவது அவசியமாக இருக்கிறது.
இந்த நிலையில் நான்காவது டெஸ்ட்க்கும் ஐந்தாவது டெஸ்ட்க்கும் இடையில் எட்டு நாட்களுக்கு மேல் ஓய்வு இருந்தது. இதனால் இந்திய அணி வீரர்கள் நான்காவது டெஸ்ட் முடிவடைந்த உடன் அவர்களது வீட்டிற்கு சென்று தங்களுடைய பொழுதை கழித்தனர்.
இந்த நிலையில் அம்பானி குடும்பத்தின் திருமண நிகழ்ச்சிகள் காஷ்மீரில் நடைபெற்றது. இதற்காக ரோஹித் சர்மா தன்னுடைய குடும்பத்தினருடன் காஷ்மீரில் சென்று அங்கு மூன்று நாட்கள் தங்கி விழாவை சிறப்பித்தார்.
காஷ்மீரில் இருந்து ஹிமாச்சல் பிரதேசத்திற்கு சாலை வழியாக வர வேண்டுமென்றால் நேரம் அதிகமாகும் என்பதால் ரோகித் சர்மா நேரடியாக ஹெலிகாப்டரில் புறப்பட்டு தர்மசாலா வந்து அடைந்தார். ரோகித் சர்மா ஹெலிகாப்டரில் இருந்து மாஸாக இறங்கி வந்து பயிற்சி முகாமில் பங்கேற்று இருக்கிறார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
ரோகித் சர்மா கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க எந்த தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக அம்பானி குடும்பத்தினரே இந்த ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்து ரோகித் சர்மாவை அனுப்பி வைத்திருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நட்சத்திர வீரர் பும்ரா தர்மசாலாவில் வந்து இறங்கிவிட்டார்.
https://twitter.com/CricCrazyJohns/status/1764931954204611061
இந்த டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுல் களம் இறங்கவில்லை. இதனால் இந்த தொடரில் சொதப்பி வரும் ரஜித் பட்டிதாருக்கு வாய்ப்பு வழங்கலாமா இல்லை புதிய வீரராக தேவுதத் படிக்கலுக்கு களமிறங்க வாய்ப்பு கொடுக்கலாமா என்ற சந்தேகமும் இந்திய அணியில் நிலவுகிறது.
கடந்த டெஸ்ட் போட்டியில் தடுமாறிய சர்பராஸ் கான் மீண்டும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெரிய ரன்களை குவிக்க வேண்டிய உத்வேகத்தில் இருக்கிறார்.மேலும் குளிர் பிரதேசமாக இருப்பதால் இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் வைத்து களமிறங்குமா? இல்லை மூன்று வேகம் பந்துவீச்சாளர்களை வைத்து களமிறங்குமா என்ற சந்தேகம் இருந்துள்ளது.