சிஎஸ்கே அணியில் ஏற்பட்ட சிக்கல்.. உடனடியாக சென்னை வந்து இறங்கிய தோனி.. வீரர்களுக்கு பறந்த உத்தரவு
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சிஎஸ்கே அணி கேப்டன் தோனி இந்த தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வந்து சேர்ந்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டியிலேயே பலம் வாய்ந்த ஆர் சி பி அணியை சிஎஸ்கே பலபரீட்சை நடத்துகிறது.
எப்போதும் ஐபிஎல் தொடருக்கு முன்பு சிஎஸ்கே அணி பயிற்சி முகாமை தொடங்கி விடும். இந்த ஆண்டும் மார்ச் முதல் வாரத்திலேயே ஐ பி எல் முகாமை தொடங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது.
ஆனால் அம்பானி குடும்ப திருமணத்தில் தோனி , பிராவோ உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க சென்றதால் இந்த முகாம் சில நாட்கள் தாமதமானது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் மிகப்பெரிய சிக்கல் ஒன்று ஏற்பட்டிருக்கிறது. அதன்படி சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் கான்வே தற்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
முதலில் கான்வே மே மாதத்தில் திரும்பி விடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது டி20 உலக கோப்பை நடைபெறுவதால் ஐபிஎல் தொடர் முழுவதும் அவர் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அணியின் திட்டத்தை ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டிய நெருக்கடியில் சிஎஸ்கே உள்ளது. இதனால் பிளான் பி குறித்து ஆலோசனை செய்ய தோனி சென்னை வந்து சேர்ந்திருக்கிறார்.
சிஎஸ்கே முகாம் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்னால் அணியில் உள்ள பிரச்சனைகளை அவர் சரி செய்ய உள்ளார். தொடக்க வீரராக யாரை களம் இருக்கலாம். மாற்று வீரராக வேறு வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்யலாமா வேண்டாமா? அப்படி இருந்தால் யாரை தேர்வு செய்வது என்பது குறித்து அணி நிர்வாகத்துடன் விவாதிக்க தோனி தற்போது அவசரமாக சென்னை வந்துள்ளார்.
இதேபோன்று மற்ற வீரர்களும் உடனடியாக சென்னை வந்து சேருமாறு சிஎஸ்கே அணியிடமிருந்து உத்தரவு பறந்து இருக்கிறது. ஏற்கனவே தீபக்சாகர் போன்ற வீரர்கள் எல்லாம் சென்னை வந்து சேர்ந்த நிலையில் சிஎஸ்கே அணியில் ஒப்பந்தமாகியுள்ள மற்ற வீரர்களும் உடனடியாக வந்து பயிற்சி முகாமில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிஎஸ்கே அணியின் நட்சத்திர பேரு ஜடேஜா தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார். இதனால் அவர் தாமதமாக தான் சென்னை அணியின் பயிற்சி முகாமுக்கு வந்து சேர்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடருக்கு இன்னும் 17 நாட்கள் உள்ள நிலையில் சிஎஸ்கே அணி தங்களுடைய பணியை தொடங்கிவிட்டது.