அதிர்ச்சியை தோற்றுவித்த இஸ்ரேலின் தாக்குதல்: தீவிரமடையும் பாலஸ்தீன விடுதலை முழக்கம்

இஸ்ரேல் – ஹமாஸ் போரானது தீவிரமடைந்துவரும் நிலையில் காசாவில் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலானது சர்வதேச ரீதியில் பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில் இரண்டாவது முறையாக இன்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் – காசா போரில் இதுவரை சுமார், 30,000க்கும் அதிகமான மக்களின் உயிரை காவுகொண்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் நிலைப்பாடு
இதன்படி போரை தடுக்க ஐ.நா பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும், இஸ்ரேல் அதை புறக்கணித்ததோடு, ஐநா பாதுகாப்பு அமைச்சகம் போர் நிறுத்த தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது , அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை இரத்து செய்ய வைத்திருந்தது.
இந்நிலையில், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், சுதந்திரமான பாலஸ்தீனத்தை வலியுறுத்தியும் இஸ்லாமிய நாடுகளில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
சமீபத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, இஸ்ரேலுக்கு ஆயுத உதவி செய்த அமெரிக்காவின் விமானப்படையை சேர்ந்த வீரர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார்.
விடுதலை முழக்கம்
இச்சம்பவம் உலகம் முழுவதும் பாலஸ்தீன விடுதலை முழக்கங்களை அதிகரிக்க செய்திருந்தது.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் காசாவில், இஸ்ரேலிய இராணுவம் திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இதன் தொடர்ச்சியாக இன்றும் துப்பாக்கிச்சூட்டை இஸ்ரேலிய இராணுவம் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.