Liver Detox: மூன்றே நாட்களில் கல்லீரலை சுத்தப்படுத்தும் அற்புத பானம்
நமது உடலில் முக்கிய உறுப்பக்களில் ஒன்றாக இடம்பெறும் உறுப்பு கல்லீரல். இது உடலில் இருக்கும் மிகவும் சென்சிடிவான உறுப்பாகும்.
உடலில் இருக்கும் நச்சுக்களை அகற்ற கல்லீரல் தான் உதவி செய்கிறது. இந்த உறுப்பின் செயற்பாடு உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு மற்றும் சக்கரையை கட்டுப்படுத்த கூடியது.
இவ்வாறு பல வேலைகளை செய்யக்கூடிய கல்லீரலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் பாதுகாக்க வேண்டும். இது நச்சுத்தன்மைகளால் பாதிக்கப்பட்டால் உடலில் பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.
இதனால் வாந்தி, மயக்கம், சிறிது நேரம் வேலை செய்தாலே சோர்வு போன்ற பிரச்சனை வரலாம். இந்த நச்சுத்தன்மைகளை விரட்ட கூடிய ஒரு ஆரோக்கிய பானத்தை இந்த பதிவில் பாாக்கலாம்.
ஆரோக்கிய பானம்
இந்த ஆரோக்கிய பானம் செய்வதற்கு கருப்பு உலர் திராட்சை எடுத்து கொள்ள வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பின்னர் இதை ஒரு நாள் அப்படியே மூடி ஊற வைக்க வேண்டும். இதன் தண்ணீரை வடிகட்டி அதில் உலர் திராட்சைகளை புதிதாக சேர்த்தும் பயன்படுத்தலாம்.
இதை நீங்கள் மண்பாத்திரத்தை கொண்டும் செய்யலாம். இந்த பானம் கிட்ட தட்ட 12 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். இதில் ஊறியுள்ள காய்ந்த திராட்சையை அப்படியே சாப்பிட்டு விட்டு காலையில் வெறு வயிற்றில் குடிக்க வேண்டும்.
இதில் கொஞ்சமாக மல்லித்தழை சேர்த்து பருகலாம். மல்லித்தழை கல்லீரலை சுத்தம் செய்வதில் பெரும் பங்காற்றுகிறது. இந்த பானம் கல்லீரலில் படிந்திருக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றுகிறது.
மற்றும் உடலில் ரத்தத்தை சுத்திகரிக்கும். இந்த பானத்தை குடிக்கும் போது புகைப்பிடித்தல் மது அருந்துதல் போன்ற பழக்கவழக்கத்தை கைவிட வேண்டும்.
இந்த பழக்கங்களை முற்றாக கைவிட்டால் நன்மை தரும். இந்த பழக்கங்கள் கல்லீரலை முற்றாக பாதிக்கின்றன.
உடலில் கல்லீரல் பாதிப்பதால் ஈரல் நோய், கொழுப்பு கல்லீரல், ஈரல் அழற்சி போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே இந்த பானத்தை குடித்து வந்தால் கல்லீரல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படும்.