கொய்யா பழத்தை அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா? முழுசா தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவாக கிடைக்கக்கூடிய பழங்களுள் கொய்யா முக்கிய இடம் வகிக்கின்றது.
இந்த பழத்தில் ஆப்பிள் பழத்தை விடவும் அதிகமாக வைட்டமின் சி நிறைந்துள்ளது. உடலில் நோய்டியதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கொய்யா பெரும் பங்கு வகிக்கின்றது.
அந்தவகையில் கொய்யா, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது.
கொய்யா செடியின் சதைப்பற்றுள்ள பழங்கள் மற்றும் இலைகள் இரண்டும் உண்ணக்கூடியவை, பழங்கள் பெரும்பாலும் சிற்றுண்டியாகவும், இலைகளை பொதுவாக மூலிகை தேநீராகவும் எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்பட்டாலும் இதை அளவாகவே சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அளவுக்கு அதிகமாக கொய்யாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதக விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பாதக விளைவுகள்
தற்காலத்தில் அதிகரித்த வேலைப்பளு காரணமாக உடல் ஆரோக்கியம் குறித்து பலரும் அக்கறை செலுத்துவது கிடையாது. போதியளவு உடற்பயிற்சி இல்லாத காரணத்தினால் பலரும் செரிமானப் பிரச்சனையால் அவதிப்பட்டுவருகின்றனர்.
அந்த வகையில் நாம் சாப்பிடும் ஒருசில பழங்களால் கூட செரிமானப் பிரச்சனை அதிகரிக்கும். கொய்யாவில் ஃபுருக்டோஸ் என்ற ஒரு வகையான சர்க்கரை அதிகமாக காணப்படுகினறது. எனவே அதிகமாக கொய்யா சாப்பிடும் பட்பத்தில் உடலில் ஃப்ருக்டோஸ் அளவு அதிகரிக்கின்றது.
இதனை ஜீரணிக்க உடல் மிகவும் சிரமப்படுகின்றது. இதன் காரணமாக வயிறு உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினை அதிகரிக்கின்றது.
உடல் ஆரோக்கியத்தை பேண சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க வேண்டியது அவசியம். கொய்யா பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் நம்முடைய ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் கொய்யா பழத்தை சாப்பிடும் போது அளவுடன் எடுத்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.
பொதுவாக கொய்யாப் பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு அல்லது எரிச்சலூட்டும் குடல் நோய் போன்ற பிரச்சிகைள் ஏற்படும். குறித்த பிரச்சிகைள் ஏற்பட கொய்யாவில் உள்ள விதைகளே காரணமாகின்றது.
அந்த விதைகள் எளிதாக எல்லோருக்கும் ஜீரணமாவது கிடையாது. அதனால் கொய்யாவை சாப்பிடும் போதும் அதன் அளவில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
கொய்யாவில் ஈ.கோலி மற்றும் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் இருக்க அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
இது கொய்யவில் மாத்திரம் அல்ல மண்ணில் விளையும் அனைத்து உணப்பொருட்களிலும் இருக்கக்கூடும். எனவே கொய்யா பழத்தை சாப்பிடும் போது நன்றாக கழுவி சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்.