விஜய்யின் GOAT ஹாலிவுட் பட ரீமேக்கா? வெங்கட் பிரபு கொடுத்த பதில்
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹீரோயினாக மீனாட்சி சவுத்ரி நடித்து வருகிறார். மேலும் பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலரும் இதில் நடிக்கின்றனர்.
ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தில் இருக்கிறது என வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் ஒரு பட விழாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் GOAT படம் பற்றிய பல்வேறு தகவல்களை கூறினார். VFX பணிகள் பல்வேறு நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது என கூறினார் அவர்.
ஹாலிவுட் ரீமேக்?
இந்த படம் ஹாலிவுட் படமான ஜெமினி மேன் ரீமேக் என முன்பு இருந்தே கிசுகிசு பரவி வருகிறது. இரண்டு படங்களின் கதையும் ஒரே மாதிரி இருப்பதாக விமர்சனம் வைக்கப்பட்டது.
அது பற்றி வெங்கட் பிரபுவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு “இது ரீமேக் எல்லாம் இல்லை, புதிய கதை தான்” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் GOAT முதல் பாடல் எப்போது வரும் என கேட்டதற்கு மே மாதம் வெளியிடப்படும் என தகவலை வெங்கட் பிரபு கூறியிருக்கிறார்.