மயோசிடிஸ் நோயில் இருந்து மீண்டு வரும் சமந்தா.. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம்
நடிகை சமந்தா
கடந்த சில ஆண்டுகளாகவே நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருந்து வருகிறார். இதன் காரணமாக சமந்தாவால் படங்களில் கூட நடிக்க முடியாமல் போய்விட்டது.
தொடர் சிகிச்சைக்கு பின் தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துகொண்டு இருக்கிறார். இந்நிலையில், நடிகை சமந்தா தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.
திருப்பதி கோவிலில் சமந்தா
நேற்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்று மூலவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார் சமந்தா. முன்னதாகவே கோவிலுக்கு சென்றுவிட்ட சமந்தாவை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, தரிசனத்திற்காக ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளனர்.
அதன்பின், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்ற சமந்தா, சாமி தரிசனம் செய்து முடித்தபின், கோவிலுக்கு வெளிவந்து, தன்னுடைய புகைப்படம் எடுக்க வந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.