Daily Rasi Palan | இன்றைய ராசி பலன் – மார்ச் 06, 2024 – புதன்கிழமை
மேஷம்:
இன்று உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வணிகர்கள் இன்று பண நெருக்கடியை சந்திக்க நேரிடும். அத்தியாவசிய பொருட்களை வாங்கும் அளவிற்கு போதுமான பணவரவு இருக்கும். நீங்கள் வேலைகள் சார்ந்து பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
ரிஷபம்:
வணிகர்கள் தங்கள் தொழில் தொடர்பாக பயணம் செய்ய வேண்டியிருக்கும், இது அவர்களுக்கு நன்மை பயக்கும். நண்பர்களின் உதவியுடன், இன்று நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். இதை கொண்டாட நீங்கள் உற்சாக மனநிலையில் இருப்பீர்கள். இன்று கடன் வாங்க நினைத்தால் அதை செய்யாதீர்கள். இன்று வாங்கும் கடனை அவ்வளவு எளிதாக உங்களால் அடைக்க முடியாது.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் சாதகமாக உள்ளது. உங்களின் எந்த ஒரு தடைப்பட்ட வேலைகளையும் இன்று சுலபமாக செய்து முடிப்பீர்கள். உங்களின் மதிப்பும், கௌரவம் கூடும். இன்று பேச்சு மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
கடகம்:
இன்று உங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய பணம் செலவழிப்பீர்கள். எனினும் உங்கள் வருமானம் மற்றும் செலவு இரண்டையும் சமநிலையாக வைத்திருங்கள். சொந்தமாக வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று திடீர் பண ஆதாயம் கிடைக்கும். உறவினர்களுக்குள் இருந்த வந்த வருத்தங்கள் இன்று நீங்கும்.
சிம்மம்:
இன்று உங்களுக்கு பண பற்றாக்குறை ஏற்படலாம். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் தொழிலுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுக்க, இன்று சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும். ஊழியர்களுக்கு இன்று எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிச்சயம் கை கொடுக்கும்.. காலையில் இருந்தே நீங்கள் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். பணியிடத்தில் உரிய மரியாதை கிடைக்கும். இன்று அரசு வேலையில் இருப்பவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
துலாம்:
பண விஷயத்தை பொறுத்தவரை துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். இன்று வணிகத்தில் இருப்போர் புதிய ஒப்பந்தங்கள் பெறலாம்.இன்று உங்கள் நிதி நிலை வலுப்படும் மற்றும் உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய கவலை குறையும். உங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய கொஞ்சம் பணம் செலவழிப்பீர்கள்.
விருச்சிகம்:
இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு பெரிதும் துணை நிற்கும். பணியில் இருப்பவர்களுக்கு இன்று பணிச்சுமை அதிகரிக்கலாம். நீங்கள் உங்கள் கடின உழைப்பாலும், நேர்மையாலும் நன்மதிப்பை பெறுவீர்கள். கூட்டாக செய்யும் தொழிலில் இன்று அதிக லாபம் கிடைக்கும்.
தனுசு:
நீங்கள் உங்கள் வணிகத்திற்காக கடன் வாங்க விரும்பினால், அதை திரும்ப சரியான நேரத்தில் செலுத்துவது கடினமாக இருக்கும். எனவே எச்சரிக்கையாக இருங்கள். உடன் பிறந்த சகோதரரின் அறிவுரையால் இன்று நீங்கள் உங்களை தொடரும் சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள்.
மகரம்:
இன்று தொழில் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் இன்று உங்கள் புகழ் பரவும். இன்று திட்டமிட்டிருக்கும் வேலைகள் அனைத்தும் முடிவடையும். உங்கள் வளர்ச்சிக்கு ஏதேனும் ஆலோசனை தேவைப்பட்டால், அனுபவமுள்ள ஒருவரை அணுகவும்.
கும்பம்:
இன்று வியாபாரத்தில் ஏதேனும் ரிஸ்க் எடுக்க நேரிட்டால், அதை தைரியமாக எடுக்கலாம். இது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். உங்களின் நிதிநிலை இன்று வலுவாக இருக்கும். ஆனால் இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம், மீறி கொடுத்தால் அந்த பணம் திரும்ப கிடைப்பது கடினம்.
மீனம்:
இன்று உங்கள் எதிரிகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் உங்களை தொந்தரவு செய்ய முயற்சிப்பார்கள். சொத்து சம்பந்தமான வழக்கு ஏதேனும் நடந்து கொண்டிருந்தால், அது உங்களுக்கு இன்று சாதகமாக முடியுயும். உங்கள் தந்தையின் ஆலோசனையை பின்பற்றுவது நன்மைகளை அளிக்கும்.