சிம்பிளா செய்யலாம் பல வகை சூப்.. குளிர்காலத்திற்கான சூப்பரான டிப்ஸ்

குளிர்காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைய அதிகப்படியான வாய்ப்புள்ளது. எனவே குளிர்காலத்தில் நம்முடைய உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தேவையான அளவு எடுத்துகொள்ளுவது அவசியமாக இருக்கிறது. அந்த வகையில், உங்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் 5 சூப் முறைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

குளிர் காலத்தில் உடலுக்கு ஆரோக்கியமான சூப் தயாரிப்பது எப்படி? குளிர் காலத்தில் பொறுமையாக உட்கார்ந்து சூப் குடிப்பது நம் உடலிற்கும் மனதிற்கும் இதமளிப்பதாக இருக்கும். வெறுமனே இந்த சூப்பை குளிர்கால பானமாக பருகுவதை விட, அதில் சில ஊட்டச்சத்துகளையும் சேர்த்தால் நம் உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். க்ரீமியான சூப்கள் தான் சத்து நிறைந்தது என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சூப்களில் சேர்க்கப்படும் பொருட்கள் தான் முக்கியம். சரியான பொருட்களை சேர்க்காவிட்டால், கலோரிகள் நிறைந்த சூடான பானமாக மட்டுமே சூப்கள் இருக்கும். இந்த குளிர்காலத்தில் சத்து நிறைந்த சூப்களை எப்படி செய்யலாம் என சில டிப்ஸ் தருகிறோம்.

சத்து நிறைந்த சாற்றை (பிராத்) தேர்ந்தெடுங்கள் : ஆரோக்கியமான சூப்பின் அடிப்படையே அதன் சாறில் (பிராத்) தான் உள்ளது. காய்கறிகள், சிக்கன் அல்லது எலும்பு சாறை தேர்ந்தெடுப்பது சிறப்பாக இருக்கும். இது உங்களுக்கு தேவையான வைட்டமின், மினரல் ஆகியவற்றையும் ஆழமான சுவையையும் தரும். வீட்டில் செய்யும் பிராத்களில் மூலிகை, மசாலா ஆகியவற்றை சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

புரதம் நிறைந்த உணவுகளை சேருங்கள் : சூப்பில் எப்போது புரதம் அதிகமுள்ள பொருட்களை சேருங்கள். பன்னீர், சோயாபீன், சுண்டல், பச்சைப்பயறு, சிக்கன் ஆகியவை சிறந்த தேர்வாக இருக்கும். இதையெல்லாம் சூப்பில் சேர்க்கும் போது முழு சாப்பாடை சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காது. விரும்பினால் சூப்பில் க்ரில் சிக்கன், வான்கோழி, டொஃபு, கடல் உணவு போன்றவையும் சேர்த்துக் கொள்ளலாம். இதிலுள்ள புரதம் உடலுக்கு தேவையான அமினோ ஆசிட்டை தருகிறது. நமது தசைகள் வலுவாக இருப்பதற்கு இதுவே உதவி செய்கிறது.

நிறைய வகை காய்கறிகளை சேர்க்கவும் : குளிர்காலத்தில் சத்து நிறைந்த பல வண்ணமயமான காய்கறிகள் கிடைக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காலே, மரக்கோசு போன்ற சீசன் காய்கறிகளை சூப்பில் பயன்படுத்துங்கள். இந்த காய்கறிகளில் வைட்டமினும் ஆண்டி ஆக்ஸிடெண்டும் இருப்பதோடு சுவையும் தருகிறது.

முழு தானியங்கள் : உடல் எடையை குறைப்பதற்காக மதியம் அல்லது இரவு நேரத்தில் சூப் குடிக்கிறீர்களா? அப்படியென்றால் அதனோடு சிறிதளவு முழு தானியங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சூப் சாப்பிடுவது பசியை அதிகப்படுத்தும். ஆகையால் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் குயினவோ, பாஸ்தா, சிவப்பு அரிசி, பார்லி ஆகியவற்றை சூப்பில் சேர்ப்பதால் ஆரோக்கியம் கிடைப்பதோடு நீண்ட நேரம் பசியும் எடுக்காது.

சீசனிங் : மூலிகை மற்றும் மசாலா பொருட்கள் சுவையை தருவதோடு அதில் நிறைய மருத்துவ குணங்களும் உள்ளன. மஞ்சள், இஞ்சி, பூண்டு போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மசாலாக்களை சூப்பில் சேர்க்கவும். கூடுதலாக தைமே, ரோஸ்மேரி, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்க்கும் போது சூப்பின் நறுமணமும் சுவையும் கூடுகிறது. உப்பு சேர்க்க விரும்பாதவர்கள் லெமன் ஜூஸ் அல்லது வினிகர் பயன்படுத்தலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *