இந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை..!
வரும் மார்ச் 12ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த திருவிழாவை முன்னிட்டு மார்ச் 12ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஏப்ரல் 6 தேதி பணி நாளாக செயல்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.