இந்த 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் மற்றும் மஹாசிவராத்திரியினை முன்னிட்டு வரும் 08.03.2024 (வெள்ளிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. 08.03.2024 (வெள்ளிக்கிழமை) அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 மார்ச் 23ஆம் தேதி (நான்காவது சனிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.சிவாலய ஓட்டம் மற்றும் மஹாசிவராத்திரிக்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881-இன் படி விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்பதால் 08.03.2024 (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல, மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக் கொடை விழாவை முன்னிட்டு மார்ச் 12ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்ககப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக ஏப்ரல் 6ஆம் தேதி வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.