யூபிஐ வெற்றிக்கு இலவசம் மட்டும் தான் காரணம்.. மக்கள் கொடுக்க நச்சு பதில்..!!

டிஜிட்டல் இந்தியா என்ற முழக்கத்தோடு மத்திய அரசு பணப் பரிவர்த்தனைகளை செய்வதற்கா யூபிஐ தளங்களை பயன்படுத்த பெரிய அளவில் ஊக்குவித்தது.

இதன்படி மக்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணம் அனுப்புதல், கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு பணம் தருதல் போன்றவற்றை டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பது குறித்து மக்களிடையே ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில் பரிவர்த்தனை கட்டணம் விதிக்கப்பட்டால், 73 சதவீதம் பேர் யூபிஐயைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடப் போவதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

எந்தக் கட்டணமும் இல்லை என்பதால் தான் மக்கள் யூபிஐயை பயன்படுத்துகின்றனர். ஒருவேளை கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டால் ஒன்று யூபிஐயின் பயன்பாட்டைக் குறைப்பார்கள் அல்லது நிறுத்திக் கொள்வார்கள் அல்லது கட்டணத்தைப் பொருத்து பயன்படுத்துவார்கள்.

இதனிடையே இப்போதே சில வெப்சைட்களும், வணிகர்களும் யூபிஐ பயன்பாட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஐஆர்சிடிசியில் ரூ.20 கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியது. இருப்பினும், இந்தியா முழுவதிலும் புகார்கள் வந்தபடிதான் இருக்கிறது.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் ஒருவர் தனது மொபைல் போனில் இருந்தே பணத்தை எளிதாகச் செலுத்த முடியும். வங்கிகளுக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. காசோலைகள் தர வேண்டியதில்லை.ஷாப்பிங் செல்லும்போது கையில் நிறைய பணம் எடுத்துச் சென்றால் களவு அல்லது தொலைந்து போக வாய்ப்பு உள்ளது. இதுவே யூபிஐ மூலம் பணத்தை செலுத்துவதால் இந்த அபாயங்கள் எல்லாம் மக்களுக்கு ஏற்படுவதில்லை.

யூபிஐ பணப் பரிவர்த்தனைகளால் வங்கிகளின் உற்பத்தித் திறன் அதிகரித்ததோடு வேலை நேரமும் நிறையவே மிச்சப்படுகிறது. இதனால் அரசுக்குத்தான் நல்ல லாபம். இந்த நிலையில் யூபிஐ போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

அதைவிடுத்து எதாவது வழிகிடைக்குமா மக்கள் தலையில் வரியை சுமத்தலாமா என்று அரசு யோசிக்கக் கூடாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *