குரு பெயர்ச்சி பலன்கள் 2024: இந்த ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், பொற்காலம்
ஜோதிடத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றும். இந்த கிரங்களின் ராசி மாற்ற மிகவும் முக்கியமான நிகழ்வாககும். நவகிரகங்களில் மங்களகரமான கிரகமாக கருதப்படும் குரு பகவான் இன்னும் சில மாதங்களில் குரு பெயர்ச்சியை நிகழப்போகிறது. இந்த கிரகத்தில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் அதிகப்படியாக சிறப்பான பலன்களை மட்டுமே தரும்.
செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் ஆகியவற்றின் காரணியான குரு பெயர்ச்சியானது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும். இதனால் இந்த ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி மதியம் 02:29 மணிக்கு மேஷ ராசியில் விலகி ரிஷப ராசிக்கு (கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்வார்) இடப் பெயர்ச்சி அடையப் போகிறார்.
குரு பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலும் அதிகப்படியான பலன் கிடைக்கும். ஆனால் மூன்று ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான லாபகரமான பலன் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு, பண வரவு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். இந்நிலையில் குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களின் நிதி நிலை மேம்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராசிக்கு குரு பெயர்ச்சி நிகழப் போகிறது. எனவே இந்த குரு பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு புரமோஷன் கிடைக்கும். நிதி நிலை மேம்படும். வீட்டில் சுப நிகழ்ச்சியால் நடக்கும். சுப செலவுகள் அதிகரிக்கலாம். புதிய தொழிலை தொடங்க மே மாதம் சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் கழிப்பீர்கள்.
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியால் அற்புத யோகம் உண்டாகும். சாதகமான பலன் கிடைக்கும். தொழிலை விரிவுப்படுத்தலாம். வாழ்க்கை துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம்.
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் நிறைய நன்மைகள் கிடைக்கும். திருமணம் நடைபெறுவதற்கான யோகம் வந்து விட்டது. பதவி முன்னேற்றம் ஏற்படலாம். தடைபட்ட வேலைகள் நிறைவடையும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். முக்கிய பொறுப்புகளை பெறலாம். வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம்.