Vijaya Ekadashi 2024 அதிர்ஷ்ட ராசிகள்: இவர்கள் மீது மகாவிஷ்ணு, லட்சுமி அன்னையின் அருள் மழை
Vijaya Ekadashi 2024: மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவிற்கு உகந்த நாட்களில் ஏகாதசியும் ஒன்றாகும். ஒவ்வொரு மாதம் வரும் ஏகாதசிக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு உள்ளது. ஏகாதசி அன்று அனுஷ்டிக்கப்படும் விரதம் அனைத்து விரதங்களிலும் மிகவும் மேன்மையானதாகவும் அதிக பலன்களை அளிக்ககூடியதாகவும் பார்க்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதத்திலும் தேய்பிறை மற்றும் வளர்பிறையில் இரண்டு ஏகாதசிகள் வருவது உண்டு. அந்த வகையில் மாசி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசி விஜய ஏகாதசி என்று அழைக்கப்படுகின்றது. இந்த ஆண்டு இன்று விஜய ஏகாதசி கொண்டாடப்படுகின்றது.
ஏகாதசி அன்று மகாவிஷ்ணுவையும் லக்ஷ்மி அன்னையையும் வணங்கினால் நாம் கேட்கும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஏகாதசி விரதம் என்பது அதிகப்படியான நேர்மறை தாக்கத்தை கொண்டுள்ளது. கிரக நிலைகளால் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைவரது வாழ்விலும் இருக்கின்றது. இந்த தாக்கங்களை நாம் செய்யும் பூஜைகள் மூலமாகவும், அனுஷ்டிக்கும் விரதங்கள் மூலமாகவும் குறைத்துக் கொள்ளலாம். குறிப்பாக ஏகாதசி நாட்களில் செய்யப்படும் பூஜைகளும் அனுஷ்டிக்கப்படும் விரதங்களும் மக்களுக்கு மிகப்பெரிய பலன்களை அளிக்கின்றன.
அந்த வகையில் விஜய ஏகாதசி அன்று குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். இந்த நாளில் இவர்கள் மகாவிஷ்ணுவையும் லட்சுமி அன்னையையும் பிரார்த்தித்தால் கேட்கும் அனைத்தும் கிடைக்கும். விஜய ஏகாதசி அன்று மகாவிஷ்ணுவின் விசேஷ அருள் பெறும் அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம் (Aries)
ஜோதிட கணக்கீடுகளின் படி விஜய ஏகாதசி மேஷ ராசிக்காரர்களுக்கு சுபமானதாக கருதப்படுகின்றது. இவர்களுக்கு நீண்ட நாட்களாக மனதில் இருந்து வந்த அழுத்தமும் கவலைகளும் நீங்கும். நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு இப்பொழுது பண வரவு அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். லட்சுமி அன்னையின் விசேஷ அருளால் அதிகப்படியான பண வரவு இருக்கும்.
மிதுனம் (Gemini)
விஜய ஏகாதசி மிதுன ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல செய்திகளை கொண்டுவரும். பணியிடங்களில் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். இதனால் உங்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். செல்வ செழிப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தியை பெறுவீர்கள். பண வரவு அதிகமாகும்.
கடகம் (Cancer)
விஜய ஏகாதசியான இன்று கடக ராசிக்காரர்கள் மீது மகாவிஷ்ணுவின் விசேஷ அருள் இருக்கும். உங்கள் வாழ்க்கையில் நேர்மறை தாக்கங்கள் அதிகரிக்கும். மிகப்பெரிய மாற்றம் ஒன்றை நீங்கள் காண்பீர்கள். உங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த அனைத்து பணிகளும் இப்பொழுது நிறைவேறும். புதிய வாகனம் அல்லது வீடு வாங்கும் திட்டத்தில் இருப்பவர்கள் இப்போது அதற்கான முயற்சிகளை எடுக்கலாம். உறவினர் ஒருவரிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.
கன்னி (Virgo)
விஜய ஏகாதசியான இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தி ஒன்று கிடைக்க உள்ளது. பணியிடத்தில் இன்று முதல் உங்களுக்கு பல நன்மைகள் ஏற்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும்.