உங்கள் காதலியின் மொபைலை அனுமதி இன்றி பார்ப்பது சரியா…? தவறா…?
பண்டைய காலத்தையும் நவீன காலத்தையும் பிரித்து பார்ப்பதற்கு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன், சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதற்கு பின் என சிலபல விஷயங்கள் மூலம் கணக்கிடுவார்கள். தற்போதைய ஆங்கில ஆண்டுகளை நாம் கி.மு., கி.பி., என பிரிப்பது போன்று. அதேபோல்,தான் இன்றைய நவீன காலகட்டத்தையும் நாம் இரண்டாக பிரிக்கலாம். ஸ்மார்ட்போன் வருகைக்கு முன் ஸ்மார்ட்போன் வருகைக்கு பின்…
ஸ்மார்ட்போன் என்பது இந் நவீன உலகின் சிறு கருவிதான் என்றாலும் இந்த உலகின் மொத்த அசைவிலும் தனது அவசியத்தை வைத்துள்ளது. மனிதர்களால் ஸ்மார்ட்போன் இல்லாமல் இப்போது இயல்பாக வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த ஸ்மார்ட்போன்கள் மனிதனின் வாழ்வில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல்தான், மனிதனின் காதல் வாழ்விலும் பல பெரிய தாக்கங்களை செலுத்தி உள்ளது.
ஸ்மார்ட்போன் இல்லாத காலத்திலேயே, காதலர்கள் எப்போதும் மெசேஜில் கடலை வறுத்துக்கொண்டும், வாய்ஸ்காலில் பேசிக்கொண்டுதான் தங்களின் காதலை வளர்த்தார்கள், இருப்பினும் ஸ்மார்ட்போனின் வருகை பிரணாமத்தையே மாற்றி உள்ளது. காதலன், காதலி ஆகியோர் வெவ்வேறு இடங்களில் இருந்து கொண்டு வீடியோ காலிலேயே பேசிக்கொள்ளும் அம்சத்தை ஸ்மார்ட்போன் ஏற்படுத்தித் தந்தது.
இதன்மூலம், காதலர்கள் அருகில் இல்லாவிட்டாலும், கடல் கடந்து இருந்தாலும் முகத்திற்கு முகம் பார்த்து பேசுவதை போன்ற உணர்வை வீடியோ கால் ஏற்படுத்தும். இப்படி பல பரிமாணங்களில் ஆண் – பெண் காதல் உறவில் ஸ்மார்ட்போன் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முக்கியமாக காதலர்களிடையே பாஸ்வேர்ட்கள், பின்நம்பர்கள் பரிமாறிக்கொள்வதை இயல்பாக மாற்றியதை கூறலாம். அதாவது, தனது ஸ்மார்ட்போனுக்கு போடும் மொபைல் லாக், ஆப் லாக் போன்றவை மட்டுமின்றி இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பாஸ்வேர்ட் வரை அனைத்தையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிறனர், அதனை சாதாரண விஷயமாகவும் எடுத்துக்கொள்கின்றனர்.
ஆனால், இது அவர்களின் காதல் உறவில் பெரிய தாக்கத்தை செலுத்தும். அந்த வகையில், இணையரின் மொபைலை அனுமதி இன்றி பார்ப்பதும் பிரச்னையை ஏற்படுத்தும். காதல் உறவுக்கு வந்துவிட்டாலும் அவரவருக்கான தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டிய கடைமை இணையருக்கு உள்ளது. எனவே, தனது இணையரின் அனுமதியின்றி அவர்களது மொபைலை திறந்து பார்க்கும் சிலருக்கு நிபுணர்கள் பல அறிவுரைகளை கூறுகின்றனர்.
நம்பிக்கை ஒன்றே வெற்றிகரமான காதல் உறவில் மிகவும் அடிப்படையான ஒன்றாகும். இதற்கு திறந்த பேச்சுவார்த்தை, வெளிப்படைத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவை தேவைப்படும். காதல் என்றில்லை, நீங்கள் திருமணமே செய்துகொண்டாலும், கணவன்/மனைவிகள் தங்களின் இணையரின் தனியுரிமையில் மூக்கை நுழைக்காமல், அவர்களின் எல்லைகளுக்கு மதிப்பளித்து, உறவில் அன்பை நீட்டிக்கச் செய்ய வேண்டும்.
ஒருவேளை, உங்கள் இணையரின் மொபைலை பார்த்து அதில் சில விஷயத்தை நீங்கள் முழுமையாக இல்லாமல் அரைகுறையாக பார்த்துவிட்டால் அது உங்களுக்கு பிரச்னையை கொடுக்கும். அதுசார்ந்து உங்கள் கணவன்/மனைவியின் பக்கத்து நியாயத்தை கேட்காவிடில் உங்களுக்கு தூக்கமே வராது. அந்த வகையில், நீங்கள் மொபலை அனுமதி இன்றி உளவு பார்த்தது காதலிக்கு தெரிந்தால் உறவு முறியவும் வாய்ப்புள்ளது.
மொபலை ஒருவேளை நீங்கள் இணையரின் அனுமதியின்றி பார்த்தீர்கள் என்றால், உங்களுக்கு இருவருக்கும் இடையே இருக்கும் நெருக்கம் பலவீனமானதாக உள்ளது என அர்த்தமாகும். இதில் ஒவ்வொருதருக்கும் ஒரே கருத்து இருந்தாலும், உங்கள் இணையரின் தனியுரிமைக்கு மதிப்பளித்து அதனை விட்டுவிடுவே நல்லது. உங்கள் துணையின் ஃபோனைப் பார்க்கும் விருப்பம் நம்பிக்கையையும் அன்பையும் குறைக்கும். உங்களுக்கு இதில் பிரச்னைகள் இருந்தால் குடும்ப நல ஆலோசகரை ஒருமுறை தொடர்புகொள்ள செய்யவும்.