முதல் போட்டியே முத்தான போட்டி – விறுவிறுப்பாக நடந்து வரும் டி20 உலகக் கோப்பை மைதானம் கட்டுமான வேலைகள்!

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. முதல் முறையாக கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான 9ஆவது சீசன் வரும் ஜூன் 1ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து இந்த தொடரை நடத்துகின்றன.

இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், கனடா, ஓமன், பப்புவா நியூ கினி, ஆப்கானிஸ்தான், நேபாள், அயர்லாந்து, உகாண்டா, நேபாள், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து என்று மொத்தமாக 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. வரும் ஜூன் 1 ஆம் தேதி இந்த 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது ஜூன் 29 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தமாக 55 டி20 போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த தொடர் தல்லாஸ், பார்படோஸ், கயானா, நியூயார்க், ஆண்டிகுவா, ஃப்ளோரிடா, டிரினிடாட் என்று பல பகுதிகளில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஜூன் 5ஆம் தேதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து ஜூன் 9ஆம் தேதி நடக்கும் 19ஆவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்தப் போட்டிக்காக நியூயார்க்கில் உள்ள இந்த மைதானம் விறுவிறுப்பாக தயார் செய்யப்பட்டு வருகிறது. ஸ்டாண்ட் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கிட்டத்தட்ட 34,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக மைதானம் அமைக்கப்படும் வேலைகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள்ளாக மைதான பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் இந்தியா விளையாடும் போட்டிகளை அமெரிக்காவில் நடத்தப்படுகிறது.

இந்தியா விளையாடும் போட்டிகள்:

நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்:

ஜூன் 05- இந்தியா – அயர்லாந்து – 8ஆவது போட்டி

ஜூன் 09- இந்தியா – பாகிஸ்தான் – 19ஆவது போட்டி

ஜூன் 12 – அமெரிக்கா – இந்தியா – 25ஆவது போட்டி

ஜூன் 15 – இந்தியா – கனடா – 33ஆவது போட்டி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *