Dubai: 24 கேரட் தங்கத்துல செஞ்ச பருப்பு குழம்பு விற்பனை..! விலை என்ன தெரியுமா?

துபாய்: அண்மையில் துபாயில் உணவகத்தில் விற்பனை செய்யப்படும் ஒரு உணவு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இந்தியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் என்ன ஸ்பெஷல்..?

பொதுவாக நாம, கேரட்டை போட்டு பருப்பு சாம்பார் வைப்பது தான் வழக்கம் ஆனால் துபாயில் உள்ள ஒரு உணவகத்திலோ 24 கேரட் தங்கத்தை போட்டு பருப்பு குழம்பு செய்து விற்பனை செய்கின்றனர்.

தங்கப் பவுடர் கலந்த பருப்பு: புகழ்பெற்ற பிரபல செஃப் ரன்வீர் பிரார் , தனது வித்தியாசமான உணவுகளுக்கு பெயர் பெற்றவர். துபாயில் உள்ள உணவகத்தில் இவர் சிறப்பு பருப்பு குழும்பு விற்பனை செய்கிறார்.

இந்த பருப்பு குழும்பு (Dal Tadka) ஒரு மரப்பெட்டியில் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது. இவ்வளவு பாதுகாப்பாக இதனை கொண்டு வர காரணம், இந்த பருப்பு கரைசலில் 24 கேரட் தங்க பவுடரை கலந்துள்ளனர். இதற்கு பெயர் “தால் கஷ்கான்”.

இதனை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கண் முன்னே தங்க பவுடர் கலந்த கரைசல் பருப்புடன் சேர்த்து மற்றும் நெய் கலந்து பரிமாறப்படுகிறது.

துபாய் ஃபெஸ்டிவ் சிட்டி மாலில் இந்த சிறப்பான தால் கஷ்கான் பரிமாறப்படுகிறது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு ஆயிரக்கணக்கான லைக்ஸைகளையும் கமெண்ட்டுகளையும் குவித்திருக்கிறது.

இந்த வீடியோவை கண்ட ஒரு பயனாளர், தங்க நமது உடலால் உறிந்து கொள்ள முடியாத ஒன்று, இதனை உணவில் சேர்ப்பதன் பயன் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார். இப்படி ஒரு உணவை யார் தான் வாங்கி சாப்பிடுகிறார்கள் என்றும் வினவியுள்ளார்.

தால் கஷ்கானுக்கு வரவேற்பு: துபாயில் கஷ்கான் என்ற பெயரில் உணவகம் நடத்தி வரும் ரன்வீர் பிரார், கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும் உணவுகள் தங்களிடம் இருக்கின்றன என தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான இந்தியர்கள் தால் எனப்படும் பருப்பு கடைசலை உண்பதை அதிகம் விரும்புவதால் அதில் ஒரு சிறப்பினை சேர்க்க, 24 கேரட் தங்க பவுடரை கலப்பதாக தெரிவித்துள்ளார். துபாய் போன்ற ஒரு நாட்டில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார். இப்படி தங்க பவுடர் கலந்த பருப்பின் விலை எவ்வளவு தெரியுமா? 58 திராம்கள் அல்லது 1,300 ரூபாயாகும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *