கோயம்புத்தூர்: மார்ச் 8 பிரம்மாண்டமாகத் திறக்கப்படும் ஸ்டார்பக்ஸ் கடை.. வேற லெவல் வீடியோ ..!!
கோயம்புத்தூர்: இந்திய மக்கள் டீ பிரியராக இருந்தாலும், கடந்த 10 வருடத்தில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் காரணமாகக் காஃபி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளனர். இதேவேளையில் காஃபி பிராண்டுகளின் வருகையும் அதிகரித்துள்ளது, மேலும் இப்பிரிவு ஸ்டார்ட்அப் நிறுவன முதலீடும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் பெரு நகரங்களில் மட்டுமே டார்கெட் செய்து இயங்கி வரும் ஸ்டார்பக்ஸ் நிறுவனம், தற்போது கோயம்புத்தூரில் தனது கடையைத் திறக்க உள்ளது. நேற்று கட்டுமான பணிகளின் புகைப்படம் வெளியான நிலையில் இன்று கடை திறக்கப்படும் தேதி மற்றும் கடையின் வீடியோ வெளியாகியுள்ளது.
பெங்களூர், டெல்லி, மும்பை, சென்னை என நாட்டின் பல நகரங்களில் பல இடத்தில் ஸ்டார்பக்ஸ் கடைகள் திறக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தாகக் கோயம்புத்தூரில் முதல் கிளை மார்ச் 8 ஆம் திறக்கப்பட உள்ளது. இந்தப் புதிய கடையின் வீடியோ இணையத்தில் வெளியாகி பலரின் வரவேற்பை பெற்றுள்ளது..
கோயம்புத்தூரில் ஸ்டார்பக்ஸ் கடை மிகவும் பிரபலமான லட்சுமி மில்ஸ் அர்பன் சென்டரில் திறக்கப்பட உள்ளது, லூலூ மால்-க்கு கிடைத்த வரவேற்பு இதற்கும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஸ்டார்பக்ஸ் காஃபி சுவைக்காகக் குடிப்பதைத் தாண்டி ஸ்டேட்டஸ் சிம்பிள் ஆகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் டாடா குழுமத்துடனான கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தற்போது 390 இடங்களில் கடைகளை நடத்தி வருகிறது. இந்த எண்ணிக்கையை 2028ஆம் ஆண்டுக்குள் 1000 ஸ்டோர்களாக உயர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.