இளவரசி டயானாவின் இடத்தில் கமீலாவை ராணியாக நினைத்துப்பார்க்க இளவரசர் ஹரியால் முடியவில்லை

இளவரசி டயானா இருக்கவேண்டிய இடத்தில், ராணி கமீலா இருப்பதை இளவரசர் ஹரி விரும்பவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹரி பிரித்தானியாவுக்குத் திரும்பமாட்டார்
கமீலா ராஜ குடும்பத்தை முன்னின்று வழிநடத்துவதை இளவரசர் ஹரியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளதாகவும், ஆகவே ஹரி பிரித்தானிய ராஜ குடும்பத்துக்குத் திரும்ப வாய்ப்பில்லை என்றும் ஊடகவியலாளரான Kinsey Schofield என்பவர் கூறியுள்ளார்.

தன் தாயாகிய இளவரசி டயானா இருக்கவேண்டிய இடத்தில், ராணி கமீலா இருப்பதை இளவரசர் ஹரி விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மன்னர் சார்லஸ் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ராணி கமீலா பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு பல பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *