மாணவரை துப்பாக்கியால் சுட்ட ஆசிரியர்! 2 நாட்களுக்கு பிறகு கல்லூரி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை

வங்கதேசத்தில் மருத்துவ மாணவர் ஒருவர் தேர்வின் போது துப்பாக்கியால் சுட்ட ஆசிரியர் இரண்டு நாட்களுக்கு பிறகு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மாணவரை சுட்ட ஆசிரியர்
பங்களாதேஷ்(Bangladesh) நாட்டின் சிராஜ்கஞ்ச்(Sirajganj) பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் ரைஹான் ஷெரீப்(Raihan Sharif) என்ற ஆசிரியர், மருத்துவ மாணவர் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திங்கட்கிழமை அன்று நடைபெற்ற வாய்வழி தேர்வின்(oral exam) போது பாதிக்கப்பட்ட மாணவருக்கும், ஆசிரியர் ரைஹான் ஷெரீப்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஆத்திரமடைந்த ஆசிரியர் ரைஹான் ஷெரீப் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மாணவரின் வலது முழங்காலில்(right knee) சுட்டுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த 23 வயது மாணவர் அராபத் அமீன் தோமல் (Arafat Amin Tomal) தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் உள்ளார்.

அதே சமயம் குற்றச்செயலில் ஈடுபட்ட ஆசிரியர் ரைஹான் ஷெரீப் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

ஆசிரியர் இடைநீக்கம்
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பிறகும், கல்லூரி நிர்வாகம் அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கண்டித்து சக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இரண்டு நாட்களுக்கு பிறகு ஆசிரியர் ரைஹான் ஷெரீப்(Raihan Sharif) கல்லூரி நிர்வாகத்தால் புதன்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *