பிரான்ஸில் ஏற்பட்ட விபத்தொன்றில் தமிழ் குடும்பஸ்தர் மரணம்
பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக பிரெஞ்சு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாரிஸ் புறநகர் நகரில் வசிக்கும் 55 வயதான தமிழரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் குடும்பஸ்தர்
துளூஸ் நகரில் மேற்கொண்ட வந்த ரயில் பாதை புனரமைப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து நிர்மாணிப்பு நிறுவனமான Bouygues Travaux publics நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.