வீரம் படத்தில் அஜித்துடன் நடித்த யுவினாவா இது? அசத்தும் அழகில் இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க
அஜித் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவாவின் தற்போதைய புகைப்படம் இணைத்தில் வைரலாகி வருகின்றது.
யுவினா
சின்னத்திரை தொடர்களில் சிறுமியாக நடித்து பிரபலமானவர் யுவினா பார்த்தவி.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த படம் வீரம்.இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் நாசரின் பேத்தியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் அஜித்துடனான இவரது காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
வீரம் படத்தின் மூலம் பிரபலமான யுவினா, தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.
தொடர்ந்து மஞ்சப்பை, அரண்மனை, கத்தி போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
மாசு என்கிற மாசிலாமணி படத்தில் சூர்யாவின் மகளாக யுவினா நடித்திருப்பார். இறுதியாக தமிழில் விஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்தார்.
இந்த நிலையில் யுவினாவின் தற்போதைய புகைப்படற்கள் சமூக வளைத்தளங்களில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.