ஜெயம் ரவிக்கு மாமியார் கொடுத்த விலையுயர்ந்த பரிசு: எத்தனை கோடி தெரியுமா?
ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் சைரன் படம் வெளியானது, இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இப்படத்தை அந்தோணி பாக்யராஜ் இயக்க, ஜெயம்ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருந்தார்.
30 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் பாதியளவு மட்டுமே வசூலைப் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படத்தையும் சுஜாதாவே தயாரிக்கவுள்ளதாக தெரிகிறது.
இந்த படத்தை அடங்கமறு இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக மருமகனுக்கு விலையுயர்ந்த கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளாராம், இதன் மதிப்பு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இனிவரும் படங்கள் சூப்பர் ஹிட்டாகி மாமியாருக்கு லாபத்தை பெற்றுத்தரவேண்டும் என தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறாராம் ஜெயம் ரவி.
இதுதவிர காதலிக்க நேரமில்லை, ஜீனி, பிரதர் உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் படத்திலும் நடித்து வருவதால் அடுத்தடுத்த ஹிட்களை எதிர்பார்க்கலாம் என்கிறது ஜெயம் ரவி வட்டாரம்.